"Bizfile இணையவாசலில் சிலரின் அடையாள எண்கள் சென்ற வாரம் வெளியிடப்பட்டதற்கு மன்னிப்புக் கேட்கிறோம்" -அரசாங்கம், ACRA
வாசிப்புநேரம் -
Bizfile இணையவாசலில் சிலரின் அடையாள எண்கள் சென்ற வாரம் வெளியிடப்பட்டதற்கு அரசாங்கமும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையமும் (ACRA) மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளன.
தகவலை வெளியிடுவதில் முறையான ஒருங்கிணைப்பு இல்லை என்பதாலும் தவறாகப் புரிந்துகொண்டதாலும் அடையாள எண்கள் புதிய இணையவாசலில் முழுமையாக வெளியிடப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
NRICஇன் கடைசி 3 எண்களையும் ஓர் எழுத்தையும் மட்டும் வெளியிடுமாறு அரசாங்கம் 2018ஆம் ஆண்டில் மக்களிடம் ஆலோசனை கூறியிருந்தது.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு (MDDI) இவ்வாண்டு ஜூலை மாதம் NRICஇன் கடைசி 3 எண்களையும் ஓர் எழுத்தையும் மட்டும் வெளியிடும் போக்கை மாற்றத் திட்டமிடுவதாகக் கூறி அரசாங்க அமைப்புகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதனால் அனைத்து எண்களையும் எழுத்துகளையும் வெளியிடவேண்டும் என்று அர்த்தமில்லை என அரசாங்கம் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வலியுறுத்தியது.
அதில் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ, கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (ACRA) தலைமை நிர்வாக அதிகாரி ஹுவே மின் (Huey Min) முதலியோர் கலந்துகொண்டனர்.
புதிய மாற்றத்தை விளக்கி, மக்களைத் தயார்ப்படுத்திய பிறகே அதை அறிவிக்கத் திட்டமிட்டிருந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.
திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் அதன் இணையவாசலில் NRIC அடையாள அட்டை எண்களை வெளியிட்டுவிட்டது.
அது பதற்றத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கியது.
அதன் பிறகு சென்ற வெள்ளிக்கிழமை அதன் 'People Search' அம்சம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சம்பவத்தைக் கருத்தில்கொண்டு அடுத்த வாரம் முதல் Bizfile இணையவாசலில் NRICஐ முழுமையாகவோ பகுதியாகவோ பார்க்க இயலாது என்று ஆணையம் சொன்னது.
NRIC அடையாள எண்களை முழுமையாகவோ பகுதியாகவோ பயன்படுத்திக் கணக்குகளை உறுதிசெய்வது பாதுகாப்பானது அல்ல என்று அரசாங்கம் தெரிவித்தது. அந்த எண்ணப்போக்கு மாறவேண்டும்; NRIC ஒருவரை அடையாளம் காண்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்று அரசாங்கம் சொன்னது.
சம்பவம் குறித்து மக்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியப்படுத்தியிருக்கலாம் என்பதை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
அடையாள அட்டை எண்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அவர்கள் கூறினர்.
அடையாள அட்டை எண்களைப் பொறுப்பான முறையில் கையாளவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆதாரம் : Others