Skip to main content
உயில் எழுதுவதை ஊக்குவிக்கப் புதிய AI தளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உயில் எழுதுவதை ஊக்குவிக்கப் புதிய AI தளம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சட்ட அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong) மக்கள் உயில் எழுதுவதை மேலும் ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உயில் எழுதி வைக்காமல் மாண்டோர் பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

உயில் எழுதுவதில் உதவ அமைச்சு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுமா என்றும் கேட்கப்பட்டது.

உயில் எழுதாமல் மாண்டோரின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதில்லை என்று பதிலளித்தார் திரு தோங்.

அண்மையில் MyLegacy@LifeSG எனும் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை அமைச்சு அறிமுகம் செய்திருப்பதை அவர் சுட்டினார்.

உயில் எழுதுவதற்கு முன் கவனத்தில்கொள்ள வேண்டியவற்றைப் புரிந்துகொள்ள அந்த தளம் உதவுகிறது.

அதன்மூலம் மேலும் பலர் உயில் எழுத முன்வருவார்கள் என நம்புவதாக திரு தோங் கூறினார்.

செயற்கை நுண்ணறிவுத் தளத்தைக் கற்றல் கருவியாகப் பயன்படுத்தலாமே தவிர அதைச் சட்ட ஆலோசனைக்கு மாற்றாகக் கருதக்கூடாது என்றார் அவர்.

21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரும், தெளிவான மனநிலையில் இருப்பவர்களும் உயில் எழுதிக்கொள்ளலாம்.

மூன்றாம் தரப்பினரின் உதவியோடும் மக்கள் உயில் எழுதலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்