Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியச் சந்தை வாய்ப்புகளை சிங்கப்பூர் இந்தியச் சமூகம் சிறந்த முறையில் பயன்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது: மூத்த அமைச்சர் லீ

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் இந்தியாவுடன் மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் சிங்கப்பூருக்கென்று தனிப்பெயரும் இருப்பதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

திரு லீயைக் கௌரவித்து அவருக்கு நன்றி கூற, சிங்கப்பூர் இந்தியச் சமூக அமைப்புகளும் வர்த்தகங்களும் இணைந்து ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

வளர்ச்சி கண்டுவரும் இந்தியாவில் சந்தை வாய்ப்புகள் அதிகம் இருப்பதை அவர் சுட்டினார்.

இருதரப்பு வர்த்தகம் , திறன் பயிற்சி, நிதித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூட்டுமுயற்சியை விரிவுபடுத்துவதோடு சுகாதாரம், மின்னிலக்கப் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் ஆகிய புதிய துறைகளையும் சிங்கப்பூர் ஆராயலாம் எனத் திரு லீ குறிப்பிட்டார்.

எனவே இந்தியாவுடன் உறவை வளர்த்துக்கொள்ள இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூர் இந்திய வர்த்தகச் சமூகம் அதற்கான முயற்சிகளைச் சிறந்த முறையில் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் திரு லீ சொன்னார்.

தமக்கு எப்போதும் ஆதரவளித்து நட்புறவோடும் இருந்த சிங்கப்பூர் இந்தியச் சமூகத்துக்குத் திரு லீ மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்