சிங்கப்பூர் exclusive
லட்டு, கற்கண்டு இப்போது துவாலை, குவளை - மாறிவரும் திருமண "door gift"- இது அவசியமா?
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை கொடுப்பதைச் சிறப்பாகக் கொடுக்கவேண்டும் என்று சில புதுமணத் தம்பதியினர் நினைக்கின்றனர்.
இதற்காக அவர்கள் செலவிடும் தொகையும் சிறிதல்ல.
அதற்கு அவர்கள் கூறும் காரணம்? "விருந்தினர்களின் திருப்தி முக்கியம்"
"50 மில்லி லிட்டர் தேன் அடங்கிய 300 போத்தல்களைத் திருமண அன்பளிப்பாகக் கொடுத்தேன். சுவையான தேன் உடலுக்கும் நல்லது என்று கருதி அதனைத் தெரிவுசெய்தேன். இதற்காக 1,000 வெள்ளி செலவிட்டேன். செலவு பற்றிக் கவலையில்லை. விருந்தினர்களுக்குப் பிடித்திருந்தது. அது போதும
"விருந்தினர்களுக்கு வாசனை சவர்க்காரம், மெழுகுவர்த்தி, இனிப்புக் கடலை ஆகிய அன்பளிப்புகளைக் கொடுத்தேன். சில பொருள்களை இணையம் வழி வாங்கினேன். 1,200 வெள்ளி வரை செலவு செய்தேன்."
என்றார் அண்மையில் திருமணம் புரிந்த 30 வயது கல்ஹாரி.
இப்படிப் பார்த்து பார்த்துக் கொடுக்கப்படும் அன்பளிப்புகள் பற்றி விருந்தினர்கள் என்ன நினைக்கின்றனர்?
அன்பளிப்பு..அது அவசியமில்லை!
மற்றவர்கள் கொடுக்கிறார்கள் என்பதற்காக நாமும் அன்பளிப்பு கொடுக்க வேண்டியதில்லை என்று தமது கருத்தைப் பகிர்ந்துகொண்டார் கவிதா.
"அந்த மனநிலை மாறவேண்டும். சிலர் என்ன கொடுப்பது என்று தெரியாமலேயே தேவையற்ற பொருளைத் தருகிறார்கள். உதாரணத்துக்குப் பிளாஸ்டிக் பொருள்....இதைத் தவிர்க்கலாமே,"
"திருமணத்துக்குச் செல்வோர் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்ப்பதில்லை. எல்லோரையும் திருப்திப்படுத்தவும் முடியாது. நான் சென்ற திருமணம் ஒன்றில் எலுமிச்சைப் பழம் கொடுத்தார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. திருமண அன்பளிப்பு என்று முதலில் பெற்றுக்கொண்டது மலாய் திருமணத்தில்தான்...முட்டை கொடுத்தார்கள். அது அவர்களது வழக்கம் என்று தெரியும். வாசனைத் திரவம், குவளை போன்ற பொருள்கள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்,"
என்று கூறினார் 62 வயது கமலம்.
என்றார் விரைவில் திருமணம் புரியவிருக்கும் 25 வயது மாலா.
"விருந்தினர்களுக்கு வழக்கம்போல் லட்டை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டுப் பணத்தை நல்ல விருந்துகொடுக்க பயன்படுத்தப்போகிறேன்,"
"திருமணத்தில் ஏகப்பட்ட செலவு, வேலை. இதற்கு மத்தியில் விருந்தினர்களுக்கு அன்பளிப்பையும் ஏற்பாடு செய்கின்றனர். ஏற்பாடு செய்பவர்களின் முயற்சியையும் அன்பையும் நினைத்து அன்பளிப்பு, விருந்து என எதையும் குறை சொல்லாமல் ஏற்றுக்கொள்ளலாமே!,"
என்றார் பிரேமா.
இதைப் பற்றி உங்கள் கருத்து? 'செய்தி' Facebook, Instagram, Tiktok பக்கங்களில் பகிர்ந்துகொள்ளுங்கள்!