சிங்கப்பூரில் பிப்ரவரியில் ஆக அதிக மழை பெய்த நாள் பிப்ரவரி 28... 28 ஆண்டுகள் காணாத பெரு மழை...
வாசிப்புநேரம் -

(படம்: CNA)
சிங்கப்பூரில் கடந்த மாதம் (பிப்ரவரி 2023) 28ஆம் தேதிதான் இதுவரை பிப்ரவரி மாதத்தில் ஆக அதிக மழைபொழிவுப் பதிவான நாள் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
அன்று காலாங்கில் (Kallang) மட்டும் 225.5 மில்லிமீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பதிவானது.
1995ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி பதிவான 159.3 மில்லிமீட்டர் மழையை இது மிஞ்சியிருப்பதாக வானிலை ஆய்வகம் கூறியது.
தென்சீனக் கடலில் காற்று வலுவடைந்து வட்டாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது. ஏறக்குறைய அனைத்து வானிலை நிலையங்களிலும் 100 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவானது. சிங்கப்பூரின் கிழக்கு, தென்பகுதிகளில் கனமழை பெய்வதாக இங்குள்ள வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்யும் மழை இம்மாதத் (மார்ச் 2023) தொடக்கத்தில் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.