Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இரைப்பையின் பெரும்பகுதியைக் குறைக்கும் அறுவை சிகிச்சை...எதற்காக?

உலக அளவில் உடல்பருமன் பிரச்சினை அதிகரித்துவருகிறது. உடலை மட்டுமின்றி மனத்தையும் பாதிக்கிறது உடல்பருமன் பிரச்சினை.

வாசிப்புநேரம் -

உலக அளவில் உடல்பருமன் பிரச்சினை அதிகரித்துவருகிறது. உடலை மட்டுமின்றி மனத்தையும் பாதிக்கிறது உடல்பருமன் பிரச்சினை.

அதிக உடல் எடை கொண்டோருக்கு உதவக் கூடிய மருத்துவ சிகிச்சைகள் சிங்கப்பூரில் உள்ளன. 

ஆனால் அத்தகைய சிகிச்சைகளை பெறுவதற்கு முன்னர் வாழ்க்கைமுறை மாற்றத்துக்கு அவர்கள் தயாராய் இருப்பது மிக அவசியம் என்கிறார் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் உடல்பருமன் நிர்வாகம், அறுவை சிகிச்சை நிலைய இயக்குநரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் ஆசிம் ஷபீர்.

சிங்கப்பூரில் உடல் எடையைக் குறைக்க குறிப்பாக இரண்டு வகை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

laparoscopic sleeve gastrectomy - இரைப்பையின் குறிப்பிட்ட பகுதியை அகற்றும் சிகிச்சை

  • இரைப்பையின் ஒரு பகுதியோ, சிறு பகுதியோ அகற்றப்பட்டு, அதன் வடிவம் சிறிதாகக் குறைக்கப்படும். இந்த மாற்றம் செரிமானத்தை பாதிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

Roux-en-Y gastric bypass - இரைப்பை, குடல் பகுதியை மாற்றியமைக்கும் சிகிச்சை

  • இரைப்பைக்கும் குடலுக்கும் இருக்கும் தொடர்பு மாற்றியமைக்கப்படும். இரைப்பையின் பகுதியின் அளவு குறைக்கப்படும்.

2004இல் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்தோர் எண்ணிக்கை 102.

2016இல் அந்த எண்ணிக்கை 335.

(படம்:தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை)

 

எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை குறித்து மேலும் சில விவரங்கள் இதில்!


இரைப்பையின் பெரும்பகுதியைக் குறைக்கும் அறுவை சிகிச்சை

திரு.ராஜேஷின் எடை 155 கிலோகிராம்.

சிகிச்சைக்குப் பின்னர் அவருடைய எடை 95 கிலோகிராம்.


(படம்: ஞானசேகரி)

திரு. ராஜேஷின் மனைவி திருமதி ஞானேசேகரியின் எடை 119 கிலோகிராம்.

சிகிச்சைக்குப் பிறகு 78 கிலோகிராம்.

(படம்:  ஞானசேகரி)

அறுவை சிகிச்சை செய்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளும் அந்தத் தம்பதியின் கதை காணொயில்.... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்