5 காசு நாணயங்கள் வைத்திருக்கிறீர்களா? அதை என்ன செய்யலாம்?
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் நாணய வாரியம் கடந்த 5 ஆண்டுகளில் எந்தப் புதிய 5 காசுகளையும் தயாரிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் அந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
புதிய 5 காசுகளைத் தயாரிக்கத் திட்டமில்லை ஆனால் அவற்றை புழக்கத்திலிருந்து அகற்றப்போவதில்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வ பதில் அளிக்கப்பட்டது.
அவை புழக்கத்தில் இருந்தாலும் சில வர்த்தகர்கள் 5 காசை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
வர்த்தகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொல்ல முடியுமா?
வாடிக்கையாளர்களிடம் பணத்தை எப்படி வாங்கலாம் என்று வர்த்தகர்கள் முடிவெடுக்க முடியும் என்கிறது சிங்கப்பூர் நாணய வாரியம்.
அவர்கள் 5 காசுகளை ஏற்க மறுக்கலாம்.
ஆனால் அதற்கு முன் வர்த்தகர்கள் அது பற்றிய அறிவிப்பைச் செய்திருக்க வேண்டும்.
இல்லையெனில் பொதுமக்கள் வாரியத்திடம் புகார் செய்யலாம்.
5 காசுகளைப் பலர் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை - ஏன்?
5 காசு நாணயங்களை அதிகளவில் வைத்துக்கொண்டால் அது கனமாகத் தெரியலாம்.
அவற்றை எண்ண அதிக நேரம் செலவிடவேண்டும். வர்த்தகங்களுக்கு அது சிரமமாகத் தெரியலாம்.
நாளிறுதியில் கணக்கு வழக்குகளைப் பார்க்கும்போது 5 காசுகளை எண்ண நிறைய நேரம் பிடிக்கலாம்.
5 காசுகளை எங்கு பயன்படுத்துவது?
🪙சில கடைகளில் 5 காசில் முடியும் விலையில் பொருள்கள் விற்கப்படுகின்றன. (உதாரணமாக: $1.95, $9.95) அங்கு 5 காசுகளைப் பயன்படுத்தலாம். விலை மலிவான பொருள்களை விற்கும் கடைகளிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
🪙பேரங்காடிகளில் இருக்கும் சுய கட்டண இயந்திரங்களில் 5 காசு நாணயங்களைப் போட்டு கட்டணத்தைச் செலுத்தலாம்.
🪙வங்கியில் 5 காசுகளைச் செலுத்தலாம். ஆனால் அதற்கென ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பிலிருந்தும் சுமார் 30 விழுக்காடு குறைந்துவிடும்.
🪙POSB/DBS போன்ற வங்கிகள் நாணயப் பரிவர்த்தனை இயந்திரங்கள் வைத்திருக்கின்றன. அதில் நாணயங்களைப் போட்டுப் பணம் எடுத்தால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தொடர்புடையது:
ஆதாரம் : Mediacorp Seithi