தேர்தலில் வாக்களிக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: CNA)
தேர்தல் முடிவடைந்ததும் தேர்தல் அதிகாரி வாக்களிக்காதவர்களின் பட்டியலைப் பதிவக அதிகாரியிடம் கொடுத்துவிடுவார்.
தேர்தல் அதிகாரி வாக்காளர் பதிவேட்டிலிருந்து அவர்களது பெயரை நீக்கிவிடுவார்.
அவர்கள் அடுத்த பொதுத்தேர்தலிலோ அதிபர் தேர்தலிலோ வாக்களிக்க முடியாது, போட்டியிடவும் முடியாது.
இதை எப்படித் தவிர்க்கலாம்?
கடந்த தேர்தல்களில் வாக்களிக்கத் தவறியவர்கள் மீண்டும் வாக்களிக்க விரும்பினால் அவர்களது பெயரைப் பதிய விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்தல்துறையின் இணையப்பக்கம் வழியாகவோ அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தில் வாக்களிக்கத் தவறியதற்கான காரணத்தைத் தெரிவிக்கவேண்டும்.
முறையான காரணமிருந்தால் பெயரை மீண்டும் கட்டணமின்றிப் பதிவு செய்யலாம்.
முறையான காரணத்தைத் தெரிவிக்காதவர்கள் 50 வெள்ளி கட்டணம் செலுத்திப் பெயரைப் பதிவு செய்யவேண்டும்.
இப்போது செய்ய முடியுமா?
இன்று சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. இதற்குப் பிறகு பெயர்களைப் பதிவு செய்ய அனுமதியில்லை.
எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தெரிந்தவர்கள் என்ன செய்யவேண்டும்?
வேட்புமனுத் தாக்கல் தினத்துக்குப் பிறகு (ஏப்ரல் 24) அடுத்த தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்கூட்டியே (Pre-Apply) விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் இணையம் வாயிலாக, சமூக மன்றங்கள் அல்லது தேர்தல்துறை அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

ஆதாரம் : Others