Skip to main content
Etomidate என்றால் என்ன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Etomidate என்றால் என்ன?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மின்-சிகரெட்டுகளில் etomidate எனும் போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்ததைத் தொடர்ந்து பல மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Etomidate என்றால் என்ன?

Etomidate விரைவாகச் செயல்படும் போதைப்பொருள். பெரும்பாலும் அது மருத்துவச் சிகிச்சைகளில் மயக்கமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஊசிமூலம் etomidateஐ மருத்துவர்கள் நோயாளிகளின் உடலில் செலுத்துவார்கள்.

மருத்துவச் சூழல்களில் நிபுணர்கள் etomidateஐப் பயன்படுத்துவதால் அதைப் பாதுகாப்பான அளவில் நோயாளிகளுக்கு வழங்குகிறார்கள்.

ஆனால் சாதாரண மக்கள் போதைப்பொருள் புழக்கத்திற்காக etomidateஐ உட்கொண்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படலாம்?

Etomidate எவ்வாறு ஒருவரைப் பாதிக்கும்?

நுரையீரலுக்குக் கடுமையான சேதத்தை உண்டாக்கும்.

குறிப்பாக ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

முக்கியமாக etomidate சிறுநீரகத்துக்கு மேல் இருக்கும் சுரப்பிகளைக் (adrenal glands) கட்டுப்படுத்தும். அந்தச் சுரப்பிகள் மனவுளைச்சலைச் சமாளிக்கும் cortisol எனும் சுரப்பிநீரைத் தயாரிக்கின்றன. அவை கட்டுப்படுத்தப்பட்டால் cortisolஐத் தயாரிக்க முடியாது. இதனால் மக்கள் மனவுளைச்சலைச் சமாளிக்க முடியாமல் அவதிப்படுவர்.

நீண்டகால விளைவுகள் என்னென்ன?

நீண்டகாலத்துக்கு etomidateஐப் பயன்படுத்தினால் மனவுளைச்சலைச் சமாளிக்கும் ஆற்றல் முற்றிலும் பாதிப்படையும்.

Etomidate புழக்கத்தால் வருங்காலத்தில் மனநலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

மூளை வளர்ச்சியையும் பாதிக்கலாம். கவனக்குறைவை உண்டாக்கலாம்.

வலிப்பும் நினைவிழந்த நிலையும் ஏற்படும் சாத்தியமும் உள்ளது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்