Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிபர் தேர்தல் முடிந்தவுடன் என்ன நடக்கும்?

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நாளை (1 செப்டம்பர்) ஒன்பதாவது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு தினம். 

வாக்களிப்பு முடிந்த பிறகு, முதலில் மாதிரி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்; விவரங்கள் வெளியிடப்படும். 

பின்னர் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு தேர்தல் அதிகாரி முடிவை அறிவிப்பார். 

வெளிநாட்டு வாக்குகள் எண்ணப்பட்டவுடன், தேர்தல் முடிவு சிங்கப்பூர் அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

அதிலிருந்து 31 நாள்களில் தேர்தல் செலவுக் கணக்கு தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளரும் நியமிக்கப்பட்ட தேர்தல் முகவரும் தேர்தல் செலவுக் கணக்கு அனைத்தையும் அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் செலவுக் கணக்குத் தகவல்கள் 6 மாதங்களுக்குப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

வாக்குச்சீட்டுகளும் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மற்ற ஆவணங்களும் 6 மாதங்களுக்குப் பத்திரமாகப் பாதுகாக்கப்படும்.

அதிபர், உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்றால் அதற்குப் பிறகு அவை அனைத்தும் அழிக்கப்படும்.

வாக்குகளின் ரகசியத்தன்மையை உறுதிசெய்யவே அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தேர்தல் துறை கூறியது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்