Skip to main content
பொதுத்தேர்தல் 2025: ஏப்ரல் 23இல் என்ன நடக்கும்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2025: ஏப்ரல் 23இல் என்ன நடக்கும்?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 23ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும்.

வேட்புமனுத் தாக்கல் தினம் தொடர்பான விதிமுறைகளும் நடைமுறைகளும் என்ன?

உத்தேச வேட்பாளர் ஒருவர் செய்யவேண்டியது என்ன?

🗳️ வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களைக் காலை 11 மணியிலிருந்து நண்பகல் 12 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சென்று கொடுக்கவேண்டும்.

🗳️ முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுத் தாக்கல் படிவத்துடன் அரசியல் நன்கொடைச் சான்றிதழையும் சமர்ப்பிக்கவேண்டும்.
 

அரசியல் நன்கொடைச் சான்றிதழ்

அரசியல் நன்கொடைச் சான்றிதழ் என்பது கட்சிக்குக் கிடைத்த நன்கொடைகளைப் பட்டியலிட்டு, அவை அனுமதிபெற்ற நன்கொடையாளர்களிடம் இருந்து வந்தவை என்பதை உறுதிசெய்யும் ஆவணம்
சுருக்கமாகப் பார்க்க
🗳️ விண்ணப்ப முறையின்படி, முன்மொழிபவர், வழிமொழிபவர், இணக்கம் தெரிவிக்கும் குறைந்தது நால்வர் ஆகியோரின் கையெழுத்துகள் உத்தேச வேட்பாளர்களுக்குத் தேவை.

🗳️ கையெழுத்திடுவோர், உத்தேச வேட்பாளர் - போட்டியிடும் தொகுதிவாசிகளாக இருக்கவேண்டும்.

🗳️ வேட்புமனுத் தாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படலாம். உத்தேச வேட்பாளர்கள் உரிய தகுதியைப் பெற்றிருக்கவில்லை அல்லது ஆவணங்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை போன்றவை சுட்டிக்காட்டப்படலாம்.

🗳️ குழுத்தொகுதிகளில் போட்டியிட விரும்பும் சிறுபான்மையினர்- மலாய்ச் சமூகக் குழு அல்லது இந்தியச் சமூகக் குழு அல்லது மற்ற சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த குழுவிடமிருந்து சான்றிதழைப் பெறவேண்டும்.

🗳️ நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து பிற்பகல் 12.30 மணிக்குள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றால், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டி இருக்கும், எவற்றில் போட்டி இல்லை போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்