Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2025: வேட்புமனுத் தாக்கல் தினம் முதல் வாக்களிப்பு தினம் வரை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் பொதுத்தேர்தலுக்குத் தயாராகிவிட்டது.

தேர்தலுக்கு வழிவிட ஏதுவாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் இன்று நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

தேர்தல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த சில நாளில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

வேட்புமனுத் தாக்கல் தினம் (23 ஏப்ரல்)

கொடுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியுள்ள வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

வேட்புமனுக்கள்

🗳️ உத்தேச வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தேர்தல் துறையின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

🗳️ ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வேட்புமனுத் தாக்கல் முடிந்தவுடன் வேட்பாளர்கள் பிரசாரத்தைத் தொடங்கலாம்.


பிரசாரம் (23 ஏப்ரல் - 1 மே)

🗳️ வேட்பாளர்கள் நேரடிப் பிரசாரக் கூட்டங்களை நடத்துவர்.


பிரசார ஓய்வு நாள் (2 மே)

🗳️ வாக்களிப்பு தினத்திற்கு முதல் நாள் பிரசார ஓய்வு நாள்.

🗳️ அன்று பிரசாரம் செய்வதற்கு அனுமதியில்லை.


வாக்களிப்பு தினம் (3 மே)

🗳️ வாக்களிப்பு தினத்தன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பர்.

சிங்கப்பூரில் வாக்களிப்பது கட்டாயம்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்