Skip to main content
HMPV நோய்க்கிருமி என்றால் என்ன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

HMPV நோய்க்கிருமி என்றால் என்ன?

வாசிப்புநேரம் -
சீனாவில் அதிகரித்து வரும் HMPV நோய்க்கிருமிச் சம்பவங்கள்..

குறிப்பாகச் சீனாவின் வட மாநிலங்களில்..

HMPV நோய்க்கிருமி என்றால் என்ன?

ஆங்கிலத்தில் HMPV நோய்க்கிருமி human metapneumovirus என்று அழைக்கப்படுகிறது.

அது ஒருவகை சுவாசப் பிரச்சினை.

சாதாரண சளிக்காய்ச்சலுக்கு இருக்கும் அறிகுறிகள்தான் அதற்கும் உள்ளன.

இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை அதில் அடங்கும்.

கடும் கிருமித்தொற்றுச் சம்பவங்களில் அது நிமோனியா (pneumonia) சுவாச நோய், மூச்சுக்குழல் அழற்சி அதாவது bronchitis போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.

அந்தக் கிருமி குளிர்காலத்திலும் இளவேனிற்காலத்திலும் அதிகம் பரவக்கூடும்.

இளம் பிள்ளைகள், மூத்தோர், குறைந்த நோய் எதிர்ப்புச்சக்தி உடையவர்கள் அந்தக் கிருமியால் எளிதில் பாதிக்கப்படக்கூடும்.

HMPV எப்படி பரவும்?

கோவிட்-19 நோய்க்கிருமியைப் போன்றே இந்த HMPV கிருமியும் பரவும்.

அவற்றில் சில:

-- கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்குத் தொடுதல், கைகுலுக்குதல் ஆகிய நடவடிக்கைகளால் பரவலாம்

-- தும்மல், இருமல் ஆகியவை மூலம் பரவலாம்

-- கிருமி இருக்கும் மேற்பரப்புகளைத் தொடுவதாலும் பரவலாம்

கோவிட்-19க்கும் HMPV கிருமிக்கும் ஒற்றுமை உள்ளதா?

HMPV கிருமி இளம் பிள்ளைகளை அதிகம் பாதிக்கலாம்.

ஏற்கனவே இருக்கும் சுகாதாரப் பிரச்சினைகளை அந்தக் கிருமித்தொற்று மோசமாக்கும்.

அது கோவிட்-19 கிருமிப்பரவலிலிருந்து வேறுபட்டது.

கோவிட்-19 கிருமித்தொற்றுக்குத் தடுப்பூசிகள் இருப்பது போல் HMPV கிருமித்தொற்றுக்குத் தடுப்பூசிகள் இல்லை.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்