"நீதித்துறை கருணை"... ஏன், எப்போது வழங்கப்படுகிறது?
வாசிப்புநேரம் -
படம்: CNA/Wallace Woon
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
செல்வந்தர் ஓங் பெங் செங், முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனின் வழக்கு தொடர்பில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
புற்றுநோயால் அவதிப்படும் ஓங்கின் உடல்நலம் கருதி அவருக்கு "நீதித்துறை கருணை"யின் (Judicial Mercy) அடிப்படையில் அதிகபட்ச அபராதம் மட்டுமே விதிக்குமாறு இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதியிடம் கோரியுள்ளனர்.
இம்மாதம் 15ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நீதித்துறை கருணை" என்றால் என்ன?
"நீதித்துறை கருணை" என்பது குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மனிதாபிமான அடிப்படையில் தண்டனையைக் குறைப்பதாகும்.
"நீதித்துறை கருணை" எப்போது வழங்கப்படும்?
குற்றத்தின் வீரியம், குற்றஞ்சாட்டப்பட்டவர் மீண்டும் குற்றம் புரியும் சாத்தியம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு "நீதித்துறை கருணை" வழங்குவது பற்றி நீதிமன்றம் முடிவெடுக்கும்.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் நிலையை விளக்கும் அனைத்து வாதங்களும் கருத்தில்கொள்ளப்படும்; அதன் பிறகே "நீதித்துறை கருணை" பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று வழக்கறிஞர் ஜோய்சஸ் கூ (Joyce Khoo) குறிப்பிட்டார்.
"நீதித்துறை கருணை" வழங்கப்படும்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபரைக் குற்றத்திற்குப் பொறுப்பேற்க வைப்பது முக்கிய நோக்கமாக இருப்பதில்லை. மாறாக மனிதாபிமான அடிப்படையில் தண்டனை விதிக்கப்படுவதாகச் சொல்கிறார் வழக்கறிஞர் சஞ்சிவ் வஸ்வானி (Sanjiv Vaswani).
"நீதித்துறை கருணை" இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ளதா?
சிங்கப்பூரில் முன்னர் மிக அரிதாகவே "நீதித்துறை கருணை" வழங்கப்பட்டுள்ளது.
CNA ஊடகத்திடம் பேசிய வழக்கறிஞர்கள், தீராத நோயால் அவதிப்படுவோருக்கு மட்டுமே"நீதித்துறை கருணை" அடிப்படையில் இதுவரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டினர்.

ஆதாரம் : CNA