Skip to main content
புதிய CPF முதலீட்டுத் திட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புதிய CPF முதலீட்டுத் திட்டம் - எப்படி வேலை செய்யும்?

வாசிப்புநேரம் -
மத்திய சேமநிதிக் கழகம் புதிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

எளிதான முறையில், குறைந்த செலவில் சேமிப்பை முதலீடு செய்ய அது வகைசெய்யும்.

2028ஆம் ஆண்டு அந்தத் திட்டம் அறிமுகம் காணவுள்ளது.

முதலீட்டுத் திட்டம் குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின்போது அறிவித்தார்.

புதிய திட்டம் எப்படி வேலை செய்யும்?

முதலீட்டாளரின் வயதையும் ஓய்வுபெறும் வயதையும் பொறுத்து முதலீடு செய்வதை Life-cycle investment products என்பர்.

வயதைப் பொறுத்து குறைந்த ஆபத்து கொண்ட முதலீட்டு திட்டங்களில் முதலீட்டாளரின் பணத்தை முதலீடு செய்யமுடியும்.

உதராணத்திற்கு இளைய முதலீட்டாளர்களின் பணம் பங்குகளில் (equities) முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

ஓய்வுபெறும் வயதை நெருங்கிகொண்டிருக்கும் முதலீட்டாளர்களின் பணம் நிலையான வருமான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.

முதலீட்டுத் திட்டத்திலிருந்து விலகும்போது கிடைக்கும் பணம் உறுப்பினரின் மத்திய சேமநிதி ஓய்வுக்கால கணக்கில் போடப்படும்.

கணக்கின் வரம்பு எட்டப்பட்டவுடன் எஞ்சிய பணம் சாதாரண கணக்கில் சேர்க்கப்படும்.

யார் பலனடைவர்?

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சிலர் விரும்பலாம். ஆனால் சொந்தக் கணக்கை உருவாக்கி அதை நிர்வகிக்கும் அனுபவம் இல்லாமல் இருக்கலாம்.

அவர்களுக்குப் புதிய திட்டம் உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 15 முதல் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான ஆண்டுகள் இருந்தால் திட்டத்தில் சேர பொறுத்தமாக இருக்கும்.

திட்டத்தில் சேர வயது வரம்பு இல்லை என்றாலும், அதிக ஆண்டுகள் முதலீட்டை வைத்திருக்கும் உறுப்பினர் அதிக பலன் பெறலாம் என்று கூறப்பட்டது.

மூத்தோர் உட்பட முதலீடு செய்ய நீண்ட காலம் இல்லாதோர் தொடர்ந்து கழகம் வழங்கும் 6 விழுக்காடு வரையிலான வட்டி விகிதத்தைப் பெற்று பலனடைவது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்