Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பல ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர்ப் பொருளாதாரம் மாபெரும் வளர்ச்சி - எப்படி?

வாசிப்புநேரம் -
சென்ற ஆண்டு (2025) சிங்கப்பூரின் பொருளாதாரம் 5 விழுக்காடு விரிவடைந்தது.

அது முன்னுரைக்கப்பட்ட அளவைவிட அதிகம்.

2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளாதாரம் 5.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 2 ஆண்டுகளாக வளர்ச்சி 5 விழுக்காட்டுக்கும் மேல் இருந்துள்ளது.

இதற்கு முன்பு 2010, 2011ஆம் ஆண்டுகளில் அந்த வளர்ச்சியைக் காண முடிந்தது.

நேற்று (10 பிப்ரவரி) வர்த்தக, தொழில் அமைச்சு இவ்வாண்டுக்கான வளர்ச்சி 2 முதல் 4 விழுக்காடு வரை இருக்குமென முன்னுரைத்தது.

இதற்கு முன்பு அது 1 முதல் 3 விழுக்காடு வரை இருக்கும் என்று முன்னுரைத்திருந்தது.

சிங்கப்பூர்ப் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம்?

1) உற்பத்தி, ஒட்டுமொத்த வர்த்தகம், நிதி, காப்புறுதி ஆகிய துறைகளில் வளர்ச்சி..

2) செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான மின்-பொருள்களுக்குத் தேவை அதிகமானது.

3) மின்-பொருள்கள், இயந்திரங்கள், உபகரணங்கள், விநியோகம் போன்ற துறைகளில் வலுவான வளர்ச்சி..

4) சிங்கப்பூருக்குள் வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் வந்தன.

5) அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு மற்ற தென்கிழக்காசிய நாடுகளைவிட சிங்கப்பூருக்குக் குறைவான வரி இருப்பது..

பொருளியல் வளர்ச்சி ஏன் முன்பு குறைவாக முன்னுரைக்கப்பட்டது?

AI தொடர்பான மின்-பொருள்களுக்கான தேவை முதலில் குறைவாக மதிப்பிடப்பட்டது.

AI தொழில்நுட்பம் புதிதாக அறிமுகமானதால் அதனுடைய வளர்ச்சி எவ்வளவு தூரம் போகும் என்பதைக் கணிக்க முடியவில்லை என்றது அமைச்சு.

அதனால் குறைத்து மதிப்பிட்டதாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூர் இந்த வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா?

இந்த ஆண்டும் அந்த வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வது சற்றுச் சிரமமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் CNA ஊடகத்திடம் கூறினர்.

சிங்கப்பூரின் AI நடுவத்திற்கான இலக்குகள் செயல்பட்டால் 3 விழுக்காட்டுக்கும் மேலான பொருளாதார வளர்ச்சியைக் காணும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

5 விழுக்காட்டை எட்டுவது சற்றுக் கடினமாக இருக்கலாமெனக் கூறப்பட்டது.

பொருளாதாரம் மெதுவடையும் அறிகுறிகளும் சுட்டிக்காட்டப்பட்டன.

நான்காம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாம் காலாண்டைவிடக் குறைவாகப் பதிவானது.

இருப்பினும் முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிங்கப்பூரில் தங்களுடைய செயல்பாடுகளை ஏற்படுத்தி வருவதால் தொடர்ந்து வளர்ச்சிகாண்பதில் AI முக்கிய அம்சமாக இருக்கும் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் கூறியது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்