Skip to main content
சிங்கப்பூரின் தமிழ் தட்டச்சுக் கருவி....எங்கே பார்க்கலாம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் தமிழ் தட்டச்சுக் கருவி....எங்கே பார்க்கலாம்?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் தமிழ் தட்டச்சுக் கருவி....எங்கே பார்க்கலாம்?

(படம்: IHC)

பிப்ரவரி மாதத்தில் இரண்டு முக்கியக் கொண்டாட்டங்கள்....

முதலில்...பிப்ரவரி 11 ஆம் தேதி தைப்பூசம்.

அடுத்து... பிப்ரவரி 21 ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலகத் தாய்மொழி நாள்.

அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் சிறப்புச் சேர்க்க இந்திய மரபுடைமை நிலையம் இரண்டு கலைப் பொருள்களைக் காட்சிக்கு வைக்கிறது.

அவற்றுள் ஒன்று வேல். மற்றொன்று தமிழ் தட்டச்சுக் கருவி (Tamil typewriter).

வேல்

தமிழ்க்கடவுள் முருகனின் புனிதச் சின்னமாகக் கருதப்படும் வேல் தைப்பூசத்தின் ஆன்மீக முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. தங்கத்தில் செய்யப்பட்ட வேலின் மீது ரூபி, மரகதக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

வியட்நாமைச் சேர்ந்த அந்த 20ஆம் நூற்றாண்டு வேல் பக்தியையும் கலைத்திறனையும் பிரதிபலிக்கிறது.

Saigon செட்டியார் கோயில் அறவாரியத்திடமிருந்து அந்த வேல் இரவல் பெறப்பட்டுள்ளது. 


 
(படம்: IHC)
தமிழ் தட்டச்சுக் கருவி

1960 களில் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட இந்த உலோகத் தமிழ் தட்டச்சுக் கருவி தமிழ் மொழியின் நெடுங்காலப் பாரம்பரியத்தைக் குறிக்கிறது.

மறைந்த திரு விஸ்வநாத இக்குவனம் ஐயர் குடும்பத்தினர் அந்தத் தமிழ் தட்டச்சுச் கருவியை இந்திய மரபுடைமை நிலையத்துக்கு அன்பளிப்பாய் வழங்கினர்.

அனைத்துலகத் தாய்மொழி நாளை அனுசரிக்கவும், தாய்மொழியைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளவும் உணர்த்துகிறது தமிழ் தட்டச்சு இயந்திரம்.

இந்தியச் சமூகத்தின் வளமான பாரம்பரியத்தையும் மொழிப் பெருமையையும் கலைப்பொருள்கள் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றின் கலாசார ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் பார்வையாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

நவீன வாழ்க்கையின் பாரம்பரியக் கூறுகளைச் சித்திரிக்கும் கலைஞர் ஸ்யுமி மிவாவின் (Tsuyumi Miwa) ஓவியங்களும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

இந்தக் கலைப்பொருள்களின் கண்காட்சி தவிர்த்து "நம் மரபின் தொடர் : பொதுப் பயிலரங்கும்" நடத்தப்படவுள்ளது.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்