WhatsApp பயனர்பெயர் - தலைவர்களின் பெயர்களை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்கத் தடுப்பு
CNA/Shadma Shaikh
This audio is generated by an AI tool.
WhatsApp பயனர்பெயர் அம்சத்தில் சிங்கப்பூர்த் தலைவர்களின் பெயர்கள் மற்றவர்கள் பயன்படுத்த முடியாதபடி தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
பிரமுகர்கள் தங்கள் கணக்கில் சொந்தப் பெயர்களைப் பயன்படுத்த அது வழிவகுக்கும்.
@LawrenceWong, @KShanmugam, @OngYeKung, @VivianBalakrishnan முதலிய பயனர்பெயர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை CNA உறுதிசெய்தது.
பிரமுகர்களின் பெயரில் சிறு மாற்றம் செய்யப்பட்ட பயனர்பெயர்களும் முடக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அவற்றில் @LawrenceWong_, @LawrenceWong1 ஆகிய பயனர்பெயர்களும் அடங்கும்.
WhatsApp செயலியின் புதிய அம்சம் பயனர்பெயர்.
அது உலகெங்கும் மெல்ல மெல்ல அறிமுகம் செய்யப்படுகிறது.
பயனீட்டாளர்கள் பயனர்பெயரை வைத்து மற்றவர்களைத் தொடர்புக்கொள்ளலாம். அவர்கள் தங்கள் தொலைபேசி எண்ணைப் பகிரத் தேவையில்லை.