Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விமானத்தில் நாய் பக்கத்தில் இருக்கையா? என்ன செய்வது?

வாசிப்புநேரம் -
விமானத்தில் நாய் பக்கத்தில் இருக்கையா? என்ன செய்வது?

(படம்: unsplash)

அண்மையில் விமானத்தில் நாயின் அருகில் உட்கார வேண்டியிருந்த நியூசிலந்துத் தம்பதியிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

விமானங்களில் எப்போது நாய்கள் அனுமதிக்கப்படுகின்றன?

ஆதரவு அளிக்கும் நாய்கள்🐶

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் ஆதரவு அளிக்கும் நாய்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அவை உடற்குறையுள்ளோருக்கு உதவக்கூடியவை.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் மனஆறுதல் அளிக்கும் நாய்களைச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அனுமதிப்பதில்லை.

காலக்கெடுவுக்கு முன்பு விண்ணப்பித்தோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக நிறுவனத்தின் பேச்சாளர் CNA-யிடம் கூறினார்.

பயணிகளுக்கு இடையே நாய்🐶

ஆதரவு அளிக்கும் நாய்களின் வயது குறைந்தது 4 மாதங்களாக இருக்கவேண்டும்.

சொல்வதைக் கேட்டு நடக்கப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்ற பயணிகளின் சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கக்கூடாது.

ஆனால் நாய்களுக்கென தனி இருக்கை கிடையாது.

சிறிய நாய்கள் பயணியின் மடியில் அமரலாம்.

பெரிய நாய்கள் பயணியின் இருக்கைக்கு முன் தரையில் உட்கார வேண்டும்.

அவற்றுக்குக் கயிறு கட்டிருக்கவேண்டும் அல்லது கூண்டில் இருக்கவேண்டும்.

நாய் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்கவேண்டும்.

இதுபோன்ற பல கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன.

விமானத்தில் நாய் பக்கத்தில் உட்கார விருப்பமில்லை... என்ன செய்வது?

விமானப் பயணிகள் சிலருக்கு நாய் பக்கத்தில் உட்கார விருப்பமிருக்காது.

அவர்கள் வேறு இருக்கைக்கு மாறலாம் என்று British Airways நிறுவனம் CNA-யிடம் கூறியது.

நாயுடன் ஒரே வரிசையில், முன் வரிசையில், பின் வரிசையில் உட்காருவோருக்கு விமான நிலையத்தில் தகவல் அளிக்கப்படுவதாக அது குறிப்பிட்டது.

அது குறித்து விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்க முயற்சி செய்வதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சொன்னது.

இடமிருந்தால் பயணிகள் வேறு இருக்கைக்கு மாற்றப்படுவர் என்று அது சொன்னது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்