Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2025: குழுத்தொகுதிகள் எப்போது, ஏன் உருவாக்கப்பட்டன?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் 14ஆவது பொதுத்தேர்தல் இவ்வாண்டு நடைபெறவுள்ளது.

வரும் நவம்பர் மாதத்திற்குள் அது நடைபெறவேண்டும்

அதன் முதற்கட்ட ஆயத்தப் பணிகளில் ஒன்றான தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வு வரைபடம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதற்கான குழு ஜனவரி 22ஆம் தேதி அமைக்கப்பட்டது.

இம்முறை புதிய குழுத்தொகுதிகளும் தனித்தொகுதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.



 
குழுத்தொகுதிகள் எப்போது, ஏன் உருவாக்கப்பட்டன?

குழுத்தொகுதி என்பது மக்கள்தொகை அளவிலும் பரப்பளவிலும் பெரிதாக இருக்கும். வட்டாரத்தில் வசிப்போரின் நலனைப் பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவாகச் செயல்படுவர்.

குழுத்தொகுதிகள் முதன்முறையாக 1988ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அறிமுகமாகின.

சிறுபான்மை இனத்தவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை உறுதி செய்ய அந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது.

குழுத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்தது ஒருவர் மலாய் இனத்தைச் சேர்ந்தவராகவோ, இந்தியராகவோ, வேறு சிறுபான்மை இனத்தவராகவோ இருக்கவேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் சட்டப்படி மலாய்ச் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள்
அதிகபட்சமாக ஐந்தில் மூன்று பகுதியளவுக் குழுத்தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும்.

உதாரணத்திற்குக் கடந்த பொதுத்தேர்தலில் மொத்தம் 17 குழுத்தொகுதிகள் இருந்தன. அவற்றில் அதிகபட்சமாக 11 குழுத்தொகுதிகளில் மலாய் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டது.

எஞ்சிய 6 குழுத்தொகுதிகளில் குறைந்தது ஒரு வேட்பாளர் இந்தியர் அல்லது மற்ற இனத்தைச் சேர்ந்தவராக இருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் சட்டப்படி குறைந்தது 8 தனித்தொகுதிகள் இருப்பதும் அவசியம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்