சிங்கப்பூருக்கு எந்த நாட்டிலிருந்து ஆக அதிகமான முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன?

(படம்: unsplash)
சிங்கப்பூருக்கு இந்தோனேசியா, புருணை ஆகிய நாடுகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.
ஆக அதிகமான முட்டைகள் சிங்கப்பூருக்கு எங்கிருந்து வருகின்றன என்பது தெரியுமா?
2021ஆம் ஆண்டு இங்கு 2,138 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
அவற்றில்...
🥚மலேசியாவிலிருந்து வந்தவை: 52%
🥚சிங்கப்பூரிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை: 30%
🥚போலந்திலிருந்து வந்தவை: 9%
🥚மற்ற நாடுகள்: 10%
சென்ற ஆண்டுக்கான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு 'செய்தி'யிடம் தெரிவித்தது.
🥚🥚எந்த அடிப்படையில் முட்டைகளை இறக்குமதி செய்ய நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது?
✅நாட்டின் நோய் நிலவரம்
✅கால்நடைப் பராமரிப்பு
✅சட்டம்
✅விலங்கு நோய் நிலவரம், கட்டுப்பாடு நடவடிக்கைகள்
✅விலங்கு சம்பந்தப்பட்ட இறக்குமதி், நுண்ணுயிரியல் தேசியக் கண்காணிப்புத் திட்டம்
எனப் பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
அதேபோல் உணவுப் பாதுகாப்புத் தரங்களையும் விலங்குநல நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் பண்ணைகளிலிருந்துதான் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
🥚🥚சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை எப்படி அடையாளம் காண்பது?
அவற்றின் பொட்டலங்களில் SG Fresh Produce (SGFP) எனும் அடையாளம் இருக்கும்.சிங்கப்பூரில் முட்டை விநியோகம் சீராக இருக்கப் பல நாடுகளிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக உணவு அமைப்பு சொன்னது.
இருப்பினும் வெளிநாடுகளில் ஏற்படக்கூடிய வெள்ளம், போர் ஆகிய எதிர்பாரா சிக்கல்களால் முட்டை விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் என்று அது கூறியது.