Skip to main content
ஓய்வு நாளில் வேறு வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஓய்வு நாளில் வேறு வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் - அபாயங்கள் என்னென்ன?

வாசிப்புநேரம் -
ஓய்வு நாளில் வேறு வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் - அபாயங்கள் என்னென்ன?

(படம்:  CNA)

வெளியீடு : 08 Sep 2025 03:38PM புதுப்பிப்பு : 08 Sep 2025 08:21PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளிநாட்டுப் பணிப்பெண் ஒருவர் ஓய்வு நாளில் வேறொரு வீட்டில் வேலை செய்ததற்காகச் சென்ற மாதம் தண்டிக்கப்பட்டார். அவருக்கு 13,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் ஒரு வீட்டில் வேலை செய்வதற்காக வந்த வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் பிற வீடுகளில் வேலை செய்வது சட்டவிரோதமானது.

முறையான வேலை அனுமதி இன்றி வேறு வீடுகளில் பணிபுரிந்தால் அதிகபட்சம் 2 ஆண்டுச் சிறைத்தண்டனை, 20,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அவர்களது வேலை அனுமதி ரத்துச் செய்யப்படலாம்; சிங்கப்பூரில் வேலை செய்யத் தடை விதிக்கப்படலாம்.

2020க்கும் 2024க்கும் இடையே, ஒவ்வொரு ஆண்டும் 80க்கும் மேற்பட்ட பணிப்பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான தண்டனைகளுக்கு என்ன காரணம்?

பணிப்பெண்கள் இரு வீடுகளில் பணிபுரிந்தால் அவர்களது நலனுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழும் என்கிறது மனிதவள அமைச்சு.

வெவ்வேறு இடங்களில் வேலை பார்ப்பதால் பணிப்பெண்களின் உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்படலாம்.

இருதரப்பின் நலனைப் பாதுகாக்கப் பணிப்பெண்கள் இதர வீடுகளில் வேலை செய்யக்கூடாது என்றது அமைச்சு.

மனிதவள அமைச்சு வகுத்துள்ள வேலை அனுமதிக் கட்டமைப்பு அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்; பணிப்பெண்களுக்கு விதிவிலக்கு வழங்குவது முறையல்ல என்று அமைச்சு சொல்லியது.

பணிப்பெண்கள் ஏன் விதிகளை மீறுகின்றனர்?

பணிப்பெண்கள் குடும்பத் தேவைகளுக்காக அதிகப் பணம் ஈட்ட முயல்கின்றனர்.

கூடுதல் பணம் சம்பாதிக்கச் சிலர் சட்டவிரோதமாகப் பிறருக்கு வேலை செய்கின்றனர்.

பிற வீடுகளில் அவர்களால் குறைந்த நேரம் வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க முடிகிறது.

பிரச்சினைக்குத் தீர்வு ?

பணத்திற்காகச் சிரமப்படும் பணிப்பெண்களுக்குக் கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடாது என்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

விதிமீறலைத் தடுக்கவேண்டும் என்றால் பணிப்பெண்களை வேலைக்கு அழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பகுதி நேரப் பணிப்பெண்களைப் பலரும் நாடுவதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதிகாரிகள் பிரச்சினையைக் களைய முயலவேண்டும் என்று ஆர்வலர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்