Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுப் போக்குவரத்து கட்டணம் ஏன் அதிகரிக்கப்படுகிறது? இனியும் அதிகரிக்குமா?

வாசிப்புநேரம் -
பொதுப் போக்குவரத்து கட்டணம் 10 முதல் 11 காசு வரை அதிகரிக்கப்படும் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் அறிவித்துள்ளது.

ஏன் அதிகரிக்கப்படுகிறது?

- பயணிகளின் எண்ணிக்கை மெதுவாக மீண்டுவருகிறது

- செலவுகள் அதிகரிக்கின்றன

- அடிப்படை பணவீக்கம் அதிகரிக்கிறது

- எரிசக்தி விலைகள் அதிகரிக்கின்றன

பேருந்துகள், ரயில் பயணங்களுக்கான கட்டணம் உண்மையில் 30 காசு அதிகரித்திருக்கலாம் என்று மன்றம் கூறியது.

ஏன் அப்படி?

2022இல்

கட்டணம் எத்தனை விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கவேண்டும்? - 13.5%

கட்டணம் உண்மையில் எத்தனை விழுக்காடு உயர்த்தப்பட்டது? - 2.9%

எத்தனை விழுக்காட்டு உயர்த்தாமல் விட்டுவைக்கப்பட்டது? - 10.6%

2023இல்

கட்டணம் எத்தனை விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கவேண்டும்? - 22.6% (2022இல் விட்டுவைக்கப்பட்ட உயர்வையும் சேர்த்து)

அது கட்டணத்தில் 30 காசு உயர்வை ஏற்படுத்தியிருக்கும்.

SBS Transit, SMRT ஆகிய நிறுவனங்கள் 22.6 விழுக்காட்டு உயர்த்த விண்ணப்பித்திருந்தன.

கட்டணம் உண்மையில் எத்தனை விழுக்காடு உயர்த்தப்பட்டது? - 7%

எப்படி 7% உயர்வு என்று தீர்மானிக்கப்பட்டது?

கட்டணம் கட்டுப்படியாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

குடும்ப வருமானத்தில் மாதாந்திரப் பொதுப் போக்குவரத்துச் செலவுகள் வகிக்கும் பங்கு அனைத்துத் தரப்பினருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கிறதா என்பது ஆராயப்பட்டது.

2022இல் குடும்ப வருமானத்தில் மாதாந்திரப் பொதுப் போக்குவரத்துச் செலவுகள் வகித்த பங்கு....

சராசரிப் பயனீட்டாளர் - 1.7%

குறைந்த வருமானம் ஈட்டும் பயனீட்டாளர் - 2.4%

இவ்வாண்டின் சம்பள உயர்வைக் கருத்தில் கொண்டால், குடும்பங்கள் வருமானத்தில் போக்குவரத்துக்குச் செலவிடும் தொகை பெரும்பாலும் மாறாது.

வரும் ஆண்டுகளில் கட்டணம் உயருமா?

ஆம்.

இவ்வாண்டுக்கான கட்டண உயர்வில் 15.6% விட்டுவைக்கப்பட்டுள்ளது.

அது வரும் ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படும்.

நிலைமை மேம்பட்டால் விட்டுவைக்கப்பட்ட கட்டண உயர்வு குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்