இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து உணவுச்சேவை, சமூகச் சேவை ஊழியர்களுக்கு வேலை அனுமதி
This audio is generated by an AI tool.
சமூகச் சேவை, உணவுச்சேவை, ஆகாயப் போக்குவரத்து ஆகிய துறைகளில் உள்ள 8 வேலைகளுக்கு இன்னும் அதிகமான நாடுகளிலிருந்து வேலை அனுமதித் திட்டத்தின்கீழ் இனி ஆட்களைச் சேர்க்கமுடியும்.
வரும் செப்டம்பர் முதல் அது நடப்புக்கு வருமென மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அறிவித்தார்.
- சிசுக்களைப் பார்த்துக்கொள்பவர்கள்
-பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டு பாடம் சொல்லிக்கொடுப்பவர்கள்
- சமூகச் சேவைத் துறையில் பயிற்சியாளர்களின் உதவியாளர்கள்
- இறைச்சி, மீன் விற்பவர்கள்
-உணவு, பானக் கடை நடத்துபவர்களின் உதவியாளர்கள்
-சமையற்கலை நிபுணர்களின் உதவியாளர்கள்
-உணவு பரிமாறுபவர்கள்
-விமானச் சிப்பந்திகள்
ஆகிய பணிகளுக்கு புதிய நடைமுறை பொருந்தும்.
பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, இந்தியா, லாவோஸ், மியன்மார், பிலிப்பீன்ஸ், இலங்கை, தாய்லந்து ஆகிய நாடுகளிலிருந்தும் இனி அந்த வேலைகளுக்கு ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.