Skip to main content
"நெருக்கடிகள் வந்தாலும் அதில் வாய்ப்புகளைக் கண்டறியலாம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"நெருக்கடிகள் வந்தாலும் அதில் வாய்ப்புகளைக் கண்டறியலாம்" - சிங்கப்பூர் மீதான வரிவிதிப்பு குறித்த கேள்விக்குப் பாட்டாளிக் கட்சியின் பதில்

வாசிப்புநேரம் -

பாட்டாளிக் கட்சியின் ஜெரால்ட் கியாம் (Gerald Giam) ஒவ்வொரு நெருக்கடியிலும் வாய்ப்புகளைக் கண்டறிந்து அவற்றை ஒழுங்காகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா விதித்திருக்கும் வரிகள் உலகளவில் நிச்சயமற்றச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. 

"வெவ்வேறு நாடுகளுக்கு வேறுபட்ட வரிகள்  விதிக்கப்பட்டுள்ளன. அந்த வாய்ப்பை நல்வழியில் பயன்படுத்திக்கொண்டுச் சிங்கப்பூர் அமெரிக்காவிலுள்ள சில துறைகளில் களமிறங்கலாம். நாம் சிக்கல்களைக் கண்டு அஞ்சக்கூடாது. நாங்கள் மட்டுமல்ல...பொதுமக்களும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும். அதுபோன்ற சமுதாயத்தை நாம் உருவாக்கவேண்டும்," என்றார் திரு கியாம். 

அண்மையில் அமெரிக்கா பல நாடுகளுக்கு விதித்த வரிகளைச் சமாளிக்க பாட்டாளிக் கட்சி முன்வைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தலாமா? இதுபோன்ற நிச்சயமற்றச் சூழலில் பாட்டாளிக் கட்சி சிங்கப்பூரர்களுக்கு எப்படிக் கைகொடுக்கத் திட்டமிட்டுள்ளது? 

'செய்தி' முன்வைத்த கேள்விகளுக்குப் பாட்டாளிக் கட்சி பதிலளித்தது. 

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்