பிள்ளைகளைக் கழிப்பறையில் அடைத்து வைத்த வளர்ப்புத் தாய் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவிருக்கிறார்
This audio is generated by an AI tool.
இரண்டு குழந்தைகளைக் கொடுமைப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை வளர்ப்புத் தாய் ஒப்புக்கொள்ளவிருக்கிறார்.
அவருக்கு வயது 35; அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
பாதிக்கப்பட்ட சிறார் அவரது முன்னாள் கணவரின் பிள்ளைகள்.
அவர் தம் முன்னாள் கணவருடன் இணைந்து பிள்ளைகளைத் துன்புறுத்தியதாகச் சொல்லப்பட்டது.
அவர்கள் பிள்ளைகளைச் சிறிய அறையில் அடைத்துவைத்தனர்.
பிப்ரவரி 2016இல் தொடங்கிய அந்தப் போக்கு 8 மாதங்கள் நீடித்தது.
அக்டோபர் 2016க்கும் ஆகஸ்ட் 2017க்கும் இடையே அவர்கள் பிள்ளைகளைக் கழிப்பறையில் நிர்வாணமாக அடைத்துவைத்தனர்.
அவர்களது துன்புறுத்தலால் 5 வயது மகள் 2017 ஆகஸ்ட் மாதம் மாண்டார்.
மகள் மெலிந்த தோற்றத்துடனும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடனும் காணப்பட்டார்.
சிறார் துன்புறுத்தல் தவிர முன்னாள் கணவர் குறித்துக் காவல்துறை அதிகாரிகளிடம் பொய் சொன்னதாகவும் பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
பிள்ளையைத் துன்புறுத்தியதாக எழுந்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு அதிகபட்சம் 4 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 4,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
அதிகாரிகளிடம் பொய் சொன்னதற்கு அதிகபட்சம் ஓராண்டுச் சிறைத்தண்டனையும் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.