Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இல்லப் பணிப்பெண் இறக்கும்வரை அவரைத் துன்புறுத்திய பெண்ணின் தாயார் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்

வாசிப்புநேரம் -
இல்லப் பணிப்பெண் இறக்கும்வரை அவரைத் துன்புறுத்திய பெண்ணின் தாயார் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்

(TODAY, Facebook/Helping Hands for Migrant Workers, Singapore)

இல்லப் பணிப்பெண் மூளைக் காயத்தால் இறக்கும் வரை அவரைத் துன்புறுத்திய பெண்ணின் தாயார் பிரேமா S நாராயணசாமி அதன் தொடர்பிலான தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

மியன்மாரைச் சேர்ந்த பியாங் காய் டோன் (Piang Ngaih Don) என்ற அந்த 24 வயதுப் பணிப்பெண் 2016ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதியன்று மாண்டார். அவர் தொடர்ச்சியாக 14 மாதங்களாகத் துன்புறுத்தப்பட்டார். 

அவர் உதை, குத்து, மிதி போன்ற துன்புறுத்தல்களை எதிர்நோக்கினார். அவருக்குப் போதிய உணவு அளிக்கப்படவில்லை.  அதனால் அவர் உடல் மெலிந்து 24 கிலோகிராம் எடையுடன் இருந்தார். 

அவர் இறந்ததற்குச் சில நாள்களுக்கு முன்பு, ஒரு சன்னலின் கம்பியில் இரவெல்லாம் கட்டப்பட்டார். 

அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த காயத்திரி முருகையனின் தாயார் பிரேமாவுக்குச் சொந்த வீடு இருந்தது. இருப்பினும், அவர் தம் மகளுடன் வாரத்துக்குச் சுமார் 3 நாள்கள் தங்கியிருந்தார். 

அவர் அப்போதெல்லாம் பியாங் தங்கியிருந்த அறையில் தூங்குவார். பியாங் அந்த அறையில் கட்டப்பட்டிருந்ததும் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருந்ததும் அவருக்குத் தெரிந்தது. 

அவரும் அந்தப் பெண்ணைத் துன்புறுத்தினார். 

வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களில் பியாங் குளியலறையைப் பயன்படுத்திக்கொண்டிருந்தபோது பிரேமா அவரது தலையில் பல முறை அடிக்கும் காட்சி பதிவானது. 

அது நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்