மோசடியில் ஏமாந்தவரே மோசடி செய்ததாகச் சந்தேகம்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் சீன அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில்
18 வயதுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (5 ஜனவரி) காலை சுமார் 11 மணியளவில் அது குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
மூதாட்டி ஒருவர் 290,000 வெள்ளியை மோசடியில் இழந்ததாகத் தகவல் கிடைத்தது.
சீனாவைச் சேர்ந்த அதிகாரிகளைப் போல நடித்த மோசடிக்காரர்கள் மூதாட்டியின் அடையாளம் சீனாவில் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது என்று சொல்லி அவரை ஏமாற்றியதாகத் தெரியவந்தது.
புகாரைப் பெற்ற 8 மணிநேரத்திற்குள் காவல்துறை அதிகாரிகள் 18 வயதுப் பெண்ணின் அடையாளத்தைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.
அந்த 18 வயது மாணவி சமூக நுழைவு அனுமதியில் சிங்கப்பூருக்கு வந்தவர் என்றும் அவரும் அதே மோசடியில் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது.
மோசடிக்காரர்கள் அவரை ஏமாற்றி சிங்கப்பூருக்கு வரவைத்தனர். காவல்துறை விசாரணையில் உதவ அவர் சிங்கப்பூருக்கு வந்ததாக நம்பி இங்கு வந்திருக்கிறார்.
ஒருவரை ஏமாற்றிய சந்தேகத்தின்பேரில் பெண் விசாரிக்கப்படுகிறார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Others