Skip to main content
"புறாக்களுக்கு உணவளிக்கக்கூடாது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

"புறாக்களுக்கு உணவளிக்கக்கூடாது" - தடுத்த ஆடவரைத் தாக்கிய பெண்

வாசிப்புநேரம் -
புறாக்களுக்கு உணவளிப்பதைத் தடுத்த ஓர் ஆடவர் தாக்கப்பட்டதால் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை சுவா சூ காங் வட்டாரத்தில் பெண் ஒருவர் புறாக்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்தார்.

அந்த வழியாகச் சென்ற ஆடவர் அவ்வாறு செய்வது தவறு என்று பெண்ணிடம் சுட்டிக்காட்டினார்.

கோபமுற்ற பெண் தகாத சைகைகளைக் காட்டினார்.

அவர் தமது பையை வைத்து ஆடவரைத் தாக்கினார்.

ஆடவர் அங்கிருந்து விலகிச் சென்றபோதும் பெண் அவரைப் பின்தொடர்ந்து சென்று சில பொருள்களை விட்டெறிந்தார்.

பாதிக்கப்பட்ட ஆடவர் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

புகாரைப் பெற்றதாகவும் விசாரணை நடத்துவதாகவும் காவல்துறை 8 World செய்தியிடம் உறுதிசெய்தது.

சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியானது.

இணையவாசிகள் அதை 200,000க்கும் மேற்பட்ட முறை பார்த்தனர். காணொளி உரையாடலுக்கும் வழி வகுத்தது.

பறவைகளுக்கு உணவளிப்பது கனிவான செயல் என்றாலும் சிங்கப்பூரில் அதற்கு இடம் இல்லை என்று சிலர் கூறினர்.

பெண் அவ்வாறு நடந்துகொண்டது தவறு என்று பலரும் குறிப்பிட்டனர்.
ஆதாரம் : Others/8 World

மேலும் செய்திகள் கட்டுரைகள்