Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மகளைப் பள்ளியில் சேர்க்க பொய்யான தகவலை அளித்தத் தாய் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் தம்முடைய மகளைச் சேர்க்கப் பொய்யான தகவல்களைச் சமர்பித்தப் பெண் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவருக்கு வயது 41.

2023ஆம் ஆண்டில் தொடக்கநிலை ஒன்றில் பதிந்துகொள்ளும் பயிற்சியில் அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

மகளுடைய அடையாளத்தைப் பாதுகாக்கக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிட அனுமதியில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர் ஆகிய இருவரிடமும் அவர் பொய்யான வீட்டு முகவரியை அளித்தார்.

அப்போதுதான் 2C கட்டத்தின் கீழ் தம்முடைய மகள் தொடர்ந்து பள்ளியில் சேர அனுமதி வழங்கப்படும் என்று அவர் எண்ணினார்.

கொடுக்கப்பட்ட முகவரி பள்ளியிலிருந்து 2 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்திருந்தது.

தொடக்கநிலை ஒன்றுக்குப் பதிந்துகொள்ளும் பயிற்சியின் கீழ், இருக்கும் இடங்களைவிட அதிகமானோர் பதிவு செய்யும்போது பள்ளிக்கு அருகே வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்திரவாசிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

பதிவுசெய்யும்போது பெற்றோரின் அடையாள அட்டையில் உள்ள முகவரியைப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் அந்தப் பெண் முகவரியை மாற்றிவிட்டதாக அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.

தாம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவிருப்பதாக அவர் கூறினார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்