Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மதுபோதையில் வாகனத்தை ஓட்டி மோட்டார்சைக்கிள் மீது மோதிய பெண்ணுக்குச் சிறை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மதுபானம் அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி மோட்டார்சைக்கிள் மீது மோதிய பெண்ணுக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு 5,000 வெள்ளி அபராதமும் 7 ஆண்டுகளுக்கு வாகனமோட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன.

61 வயது கோ சியு ஹுவா (Koh Chiew Hwa) சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மதுபானம் அருந்தியிருக்கிறார்.

பிறகு வாகனத்தையும் ஓட்டியிருக்கிறார்.

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் வலப்பக்கம் வளையும்போது நேராக வந்த மோட்டார்சைக்கிள் மீது கோ மோதினார்.

மோட்டார்சைக்கிள் ஓட்டுநருக்கும் அதில் பயணம் செய்த பெண்ணுக்கும் வயது 22.

அவர்கள் இருவருக்கும் எலும்பு முறிவு உட்பட காயங்கள் ஏற்பட்டன.

விபத்து நடந்த இடத்திற்குக் காவல்துறை சென்றபோது கோவும் அவருடைய வாகனமும் அங்கு இல்லை.

தம்முடைய கணவரின் ஆலோசனையைக் கேட்ட பின்னர் கோ விபத்து நடந்த இடத்திற்கு அரை மணிநேரம் கழித்து வந்தார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்