Skip to main content
புறாக்களுக்குத் தீனி போட்ட 71 வயதுப் பெண்ணுக்கு $3,200 அபராதம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புறாக்களுக்குத் தீனி போட்ட 71 வயதுப் பெண்ணுக்கு $3,200 அபராதம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தோ பாயோவில் (Toa Payoh) புறாக்களுக்குத் தீனி போட்ட பெண்ணுக்கு 3,200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சண்முகநாதன் ஷாம்லா எனும் அந்த 71 வயது சிங்கப்பூரருக்கு ஏற்கனவே வனப்பறவைகளுக்குத் தீனி போட்ட குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டது.

மீண்டும் குற்றத்தைச் செய்யப்போவதில்லை என்று அவர் உறுதி அளித்திருந்தார்.

ஆனால் சுமார் 6 மாதங்களில் 9 முறை அவர் புறாக்களுக்குத் தீனி போட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

4 குற்றச்சாட்டுகளை ஷாம்லா ஒப்புக்கொண்டார். மேலும் 5 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

கடந்த ஆண்டு மே மாதம் ஷாம்லாவுக்கு 1,200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. புறாக்களைக் கண்ணி வைத்துப் பிடிக்கும் தேசியப் பூங்காக் கழகத்தின் நடவடிக்கைக்கும் அவர் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படுகிறது.

எழுத்துபூர்வ அனுமதியின்றி வனப்பறவைகளுக்கு மீண்டும் மீண்டும் தீனி போட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்