Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களின் அடையாள அட்டை எண்ணைக் கொண்டு சுமார் 400 முகக்கவசப் பொட்டலங்களைப் பெற்ற மாது

வாசிப்புநேரம் -

வெளிநாட்டு ஊழியர்களின் அடையாள அட்டை எண்ணைக் கொண்டு இலவச முகக்கவசங்களைப் பெற்று ஏமாற்றிய மாதுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

48 வயதுடைய சுவா சா மே-க்கு (Chua Sah May) 7 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

397 முறை பெற்ற முகக்கவசங்களை அவர் 66 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்று கூறப்பட்டது.

மனிதவளத் துறையில் பணியாற்றும் சுவா, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்திய  நிறுவனங்களின் சம்பளம், வேலை அனுமதி அட்டை விவகாரங்களைக் கையாள்வதுண்டு.

2020-ஆம் ஆண்டில் துமாசிக் அறநிறுவனம் மேற்கொண்ட  முகக்கவச விநியோகத்தின்போது அவர் சொந்தத் தேவைக்காக மேலும் பல முகக்கவசங்களைப் பெற எண்ணினார்.

வெளிநாட்டு ஊழியர்கள் சிலரின் அடையாள அட்டை விவரத்தை வைத்துத் தானியக்க இயந்திரங்களில் முகக்கவசங்களை அவர் பெற்றார்.

ஊழியர்களில் ஒருவர் தம்முடைய முகக்கவசத்தைப் பெறமுடியாததைக் கவனித்தபோது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

சுவா கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

- CNA/ll(zl)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்