பேருந்து ஓட்டுநரைத் திருமணத்திற்கு அழைத்த பயணி
வாசிப்புநேரம் -

(காணொளியிலிருந்து எடுக்கப்பட்டப் படம்: TikTok/rynsieeees)
சிங்கப்பூரில் 7 ஆண்டுகளாக ஒரே பேருந்துச் சேவையில் பயணம் செய்த பெண் அதன் ஓட்டுநர்மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார்.
25 வயதாகும் ரினி ரிந்தியானி (Rini Rindiani) ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் வசிக்கிறார்.
17 வயதில் அவர் 179ஆம் எண் சேவையில் பயணம் செய்யத் தொடங்கினார்.
அப்போது பகுதிநேரமாகப் பணியாற்றிய ரிந்தியானிக்குப் பேருந்து ஓட்டுநர் "அங்கில் ராமா" அடிக்கடி முறுக்கு, கறி பஃப் (curry puff) போன்ற பலகாரங்கள் வாங்கித்தருவது வழக்கம்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் படித்தபோது நடனப்யிற்சியை முடித்துவிட்டு நள்ளிரவு 12.30 மணிக்குக் கடைசிப் பேருந்தைத் தவறவிடக்கூடாது என்று அவர் ஓடிவருவதைக் கண்டால் "அங்கில் ராமா" அவருக்காகக் காத்திருப்பார்.
படிப்பை முடித்துத் தற்போது வேலைசெய்யும் ரிந்தியானி தொடர்ந்து அதே பேருந்துச் சேவையில்தான் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்கிறார்.
இத்தனையாண்டு நட்பிற்குப் பிறகு குடும்ப உறுப்பினர் போலவே மாறியுள்ள "அங்கில் ராமா"வை ரிந்தியானி தமது திருமணத்திற்கும் அழைத்துள்ளார்.
அவர்களது நட்பு குறித்து TikTokஇல் ரிந்தியானி வெளியிட்ட காணொளியை 130,000 பேருக்குமேல் கண்டுள்ளனர்.

ஆதாரம் : Others