Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கர்ப்பிணி தமது குழந்தையை இழக்க நேரிட்ட சம்பவம் - NUH-இல் பொருத்தமான மருத்துவப் பராமரிப்பு நடைமுறைகள் இருந்தன

வாசிப்புநேரம் -

கர்ப்பிணி தமது குழந்தையை இழக்க நேரிட்டதாகக் குறிப்பிடப்படும் சம்பவத்தில் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை (NUH) பொருத்தமான மருத்துவ  நடைமுறைகளைச் செயல்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் நடைமுறைகள் மறுஆய்வு செய்யப்பட்டதாகவும் சுகாதார மூத்த துணையமைச்சர்  ஜனில் புதுச்சேரி (Janil Puthucheary) நாடாளுமன்றத்தில் கூறினார்.

குடும்பத்தின் இழப்புக்குத் தமது இரங்கலைத் தெரிவித்த அவர், மருத்துவமனையில் தகுந்த மருத்துவச் செயல்முறைகள் இருந்தாலும் மேம்படுத்தப்படக்கூடிய சில அம்சங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகச்  சொன்னார்.

தொடர்பு மேம்பாடுகள், அவசர சிகிச்சைப் பிரிவுக்கும் மகப்பேற்றுப் பிரிவுக்கும் மாற்றப்படுவதில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது போன்றவற்றை டாக்டர் புதுச்சேரி சுட்டினார்.

மருத்துவமனை அத்தகைய மேம்பாட்டுகளைத் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

அவசரச் சிகிச்சைப் பிரிவில் நெடுநேரம் காத்திருந்து குழந்தையைப் பறிகொடுத்ததாகக் கூறிய கர்ப்பிணியின் கணவர் கருச்சிதைவு மருத்துவமனையில் இடம்பெறாமல் இருந்திருக்கக்கூடும் என அண்மையில் கூறியிருந்தார். 

மருத்துவமனையுடன் நடந்த பல்வேறு சந்திப்புகளுக்குப் பிறகு விவரங்கள் தெளிவுபடுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்