Skip to main content
சிங்க நடனக்குழு உடை மீது காப்பி ஊற்றித் தகராறு செய்த பெண்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்க நடனக்குழு உடை மீது காப்பி ஊற்றித் தகராறு செய்த பெண்

வாசிப்புநேரம் -

வெஸ்ட் கோஸ்ட் (West Coast) சமூக மன்றத்தில் லிம் சொக் லே (Lim Sok Lay) என்ற பெண் சிங்க நடனக் குழுவின் உடை மீது காப்பியை ஊற்றிச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பொங்கோலிலுள்ள (Punggol) காப்பிக் கடையொன்றில் தமது பேரனின் மூக்கைக் கீறியதாகக் கூறி 52 வயது லிம், ஆடவர் ஒருவரைப் பலமுறை தள்ளிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தம்மீது கொண்டுவரப்பட்ட  குற்றச்சாட்டுகளில் ஒன்றை அவர் ஒப்புக்கொண்டார். மற்ற 2 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

லிம் மீதான தீர்ப்பு இம்மாதம் 26ஆம் தேதி அறிவிக்கப்படும்.

லிம்முடன் சேர்ந்து சிங்க நடனக் குழுவின் உடை மீது காப்பியை ஊற்றியதாக அவரது கணவர் சியேங் எங் ஹோக் (Cheang Eng Hock) மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் பிப்ரவரி 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.

தங்களது மகன் சிங்க நடனக் குழுவில் இணைந்தது தம்பதிக்குப் பிடிக்கவில்லை. 

அதனால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றத்தில் சிங்க நடனப் போட்டியில் கலந்துகொள்ளவிருந்த மகனை அவர்கள் தடுத்துள்ளனர். 

மகன் பேச்சை மீறியதால் அவரைத்தேடி அவர்கள் அம்மன்றத்துக்குச் சென்றனர்.

அங்கு மகனின் சிங்க நடனக் குழுவின் உடை மீது காப்பியை ஊற்றிய லிம் உடையின் தலைப்பகுதியைக் காலால் எட்டி உதைத்துச் சேதப்படுத்தினார்.

இதனால் 1,330 வெள்ளி சேதம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

சுமார் 200 பேர் கூடியிருந்த மன்றத்தில் லிம்மின் நடவடிக்கை 10 நிமிடங்களுக்குக் கடும் இடையூறை ஏற்படுத்தியது. அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

காப்பி ஊற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் லிம்முக்குக் கூடியபட்சம் 2 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆடவரைத் தள்ளிவிட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 3 மாதச் சிறை, கூடியபட்சம் 1,500 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்