Skip to main content
சிங்கப்பூரில் முதுகலைப் படிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

சிங்கப்பூரில் முதுகலைப் படிப்பு - இணையவாசிகளிடம் பணம் கேட்ட பெண்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் முதுகலைப் படிப்பு - இணையவாசிகளிடம் பணம் கேட்ட பெண்

Instagram/evelynclrs

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 26 Sep 2026 03:11PM புதுப்பிப்பு : 26 Sep 2026 03:12PM

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ள பெண் ஒருவருக்கு வாய்ப்பு...

அதற்கு 80,000 வெள்ளி செலவாகும்.

இணையத்தில் உதவி கேட்ட இந்தோனேசியர் எவ்வலின் கிலேரிசா சிரேகர் (Evelyn Clarissa Siregar) கண்டனத்தைப் பெற்றுள்ளார்.

எவ்வலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20 செப்டம்பர்) Instagram,Threads ஆகிய தளங்களில் நிதி ஆதரவாளரைத் தேடிப் பதிவு போட்டார்.

'வேலை செய்து, பணம் சேமித்தால் என்ன?'

'கடன் கேட்டால் என்ன?'

என இணையவாசிகள் பலர் கண்டித்தனர்.

'முதுகலைப் படிப்பை மேற்கொள்ள நினைப்பது அவரின் தனிப்பட்ட முடிவு; பணத்தைத் திரட்டிவிட்டுத்தானே விண்ணப்பிக்கவேண்டும்?' என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

'கனவை அடைய எல்லா வழிகளையும் பரிசீலிப்பது தவறு இல்லை' என்று  எவ்வலின் முதலில் தம்மைத் தற்காத்துப் பேசினார்.

பிறகு அவர் இன்னொரு பதிவில் மன்னிப்புக் கேட்டார்.

"நான் நினைத்தது தவறு இல்லை. ஆனால் பேசிய விதம் தவறு. நான் அனைவரின் கருத்தையும் புறக்கணித்திருக்கக்கூடாது. என் நிலைமையை எடுத்து சொல்லிருக்கவேண்டும்," என்றார் அவர்.

ஏற்கனவே சில உபகாரச் சம்பளத் திட்டங்களுக்கு விண்ணப்பித்ததாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் அவர் சொன்னார்.

ஆதாரம் : Others/Social media

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்