Skip to main content
கணவனைக் குத்திக் கொன்ற பெண்ணுக்குச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கணவனைக் குத்திக் கொன்ற பெண்ணுக்குச் சிறை

வாசிப்புநேரம் -
சண்டையில் கணவரைக் குத்திக் கொன்ற பெண்ணுக்கு 31 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான 52 வயது பனியா ஷாப் (Baniyah Shap), மரணம் விளைவித்த செயல், தாக்குதலுக்குப் பிறகு கத்தியைக் கழுவி மறைத்து வைத்தது உட்பட 7 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மேலும் 8 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

என்ன நடந்தது?

பனியா 62 வயது திரு அலி சாபனைத் (Ali Saaban) திருமணம் செய்திருந்தார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அங் மோ கியோவில் இருவரும் வசிக்கும் புளோக்கிற்கு அருகே சம்பவம் நடந்தது.

புளோக்கின் வெற்றுத்தளத்தில் பனியாவுக்கும் அவரது சகோதரருக்கும் சண்டை மூண்டது.

அப்போது திரு அலி பனியாவைப் பின்னாலிருந்து பிடித்தவாறு வீட்டிற்குப் போகச் சொன்னார்.

பனியா திரு அலியுடன் சண்டைபோடத் தொடங்கினார்.

சண்டையில் பனியாவின் சாவிக்கொத்து கீழே விழுந்தது.

அதில் மடக்கும் கத்தி மாட்டியிருந்தது.

சண்டையில் பனியா கத்தியைக் கொண்டு கணவரின் தொடையில் தாக்கினார்.

வழிப்போக்கர்கள் உடனே அவருக்கு உதவ முன்வந்தனர்.

அதிர்ச்சியில் பனியா வீட்டிற்குச் சென்று கத்தியைக் கழுவி மறைத்து வைத்தார்.

அவர் போர்வையுடன் மீண்டும் கணவர் இருக்கும் இடத்திற்குத் திரும்பினார்.

யாரும் காவல்துறையையோ அவசர மருத்துவ உதவி வாகனத்தையோ தொடர்புகொள்ள வேண்டாம் என்று அவர் கூட்டத்தைப் பார்த்துக் கத்தினார்.

திரு அலி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

மறுநாள் அவர் மாண்டார்.

பனியாவுக்கு 5 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்,
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்