Skip to main content
சட்டவிரோதமாக விபசார விடுதி நடத்திய பெண்ணுக்குச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சட்டவிரோதமாக விபசார விடுதி நடத்திய பெண்ணுக்குச் சிறை

வாசிப்புநேரம் -
உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக விபசார விடுதி நடத்திய பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் 44 வயது மோ சுவெகுய் (Mo Xuekui).

விலைமாது ஒருவர் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

கார்பெண்ட்டர் ஸ்ட்ரீட்டில் (Carpenter Street) காவல்துறை திடீர்ச்சோதனையை நடத்தியது.

மோ மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளை எதிர்த்து அவர் விசாரணை கோரினார்.

தாம் அங்கு காசாளராகப் பணி புரிந்ததாகச் சொன்னார்.

நிலையத்தில் பணியாற்றிய பெண்கள் தமக்குத் தெரியாமல் பாலியல் சேவைகளை வழங்கியதாக மோ சொன்னார்.

அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர் மோவுக்கு எதிராகச் சாட்சி சொன்னார்.

மோ பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்;
அதிலிருந்து விடுபட விரும்பியவர்களிடம் 4,500 வெள்ளி கோரினார்; அந்தப் பணத்தை ஈட்டப் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகச் சாட்சி சொன்ன பெண் கூறினார்.

அவர் முன்வைத்த சாட்சியம் நம்பகக்கூடியதாக இருந்தது என்று நீதிபதி கூறினார்.

மோவின் வாதங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன என்றார் அவர்.

மோவுக்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்