Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

அனைத்துலக மகளிர் தினம்: கைதூக்கிவிடும் பெண்கள் - சரோஜினியைச் சந்திப்போமா?

வாசிப்புநேரம் -
குடும்பம், வீடு, வேலை அதற்கு இடையே சமூகச் சேவை.
கைகொடுக்கும் பெண்கள்... கைதூக்கிவிடும் பெண்கள்...சிலரைச் சந்தித்தது 'செய்தி'.

யார் இவர்?

திருமதி சரோஜினி பத்மநாதன்
குடும்ப நல ஆலோசகர், பெற்றோருக்கான பயிற்றுவிப்பாளர்

சிறு வயதிலிருந்து சமூக சேவை...

"சிறு வயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட நிறைய ஊக்கம் பெற்றேன். குறிப்பாக எனது தாய், சகோதரி, தமிழ் ஆசிரியை கஸ்தூரி சுப்ரமணியம் ஆகியோர் எனது முன்மாதிரிகள்."

வேலை வாழ்க்கை...

"வேலையில் சேர்ந்த பின்பு, சக ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவ பல வாய்ப்புகள் கிடைத்தன."

"பிள்ளை வளர்ப்பில் தாய்மார்களுக்கு இருக்க வேண்டிய திறன்களைப் பகிர்ந்துகொள்கிறேன்."

"சமூகத்திலிருந்து எனக்குக் கிடைத்ததைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்... அதுவே என் இலக்கு."

சொல்ல விரும்புவது?

"உதவி தேவைப்படுவோருடன் பேசுங்கள்; என்ன செய்யலாம் என்று கலந்துரையாடுங்கள். அவர்கள் தீர்வு காண உதவுங்கள்."

இளம் பெண்களே...

"வாய்ப்புகள் வரும்போது கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்கள் தலைமைத்துவத்தை, துணிவை வெளிக்காட்ட அது உதவும்."
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்