சிங்கப்பூர் இந்தியப் பெண்களின் மனநலம்: ஒரு சமுதாயமாக நாம் என்ன செய்யலாம்?
#CelebratingSGWomen மனநலப் பிரச்சினைகள் குறித்த தவறான எண்ணமும், பாகுபாடும் இன்னும் சமுதாயத்தில் இருக்கத் தான் செய்கிறது.

(படம்: Raj Nadarajan/TODAY)
#CelebratingSGWomen
மனநலப் பிரச்சினைகள் குறித்த தவறான எண்ணமும், பாகுபாடும் இன்னும் சமுதாயத்தில் இருக்கத் தான் செய்கிறது.
அதைப் போக்குவதற்கு, சிங்கப்பூர் இந்தியப் பெண்களின் மனநலத்தைப் பேணிக் காப்பதற்கு ஒரு சமுதாயமாக நாம் என்ன செய்யலாம்?
முதலில், மனநலப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வும் கல்வியும் தேவை என்கிறார் குடும்ப நல ஆலோசகர் திருமதி லக்ஷ்மி அழகப்பன்.
அடுத்து, மனநலப் பிரசசினைகளால் பாதிக்கப்பட்டோர் நடத்தப்படும் விதத்தில் கவனம் தேவை என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கும்போதோ அவர்களைப் பற்றி கேள்விப்படும்போதோ நாம் நடந்துகொள்ளும் விதம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
என்றார் திருமதி லக்ஷ்மி.

இதற்கிடையில், மனநலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படாதபோது ஏற்படக்கூடிய அபாயங்களையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மனநல ஆலோசகர் குமாரி பிரியாநிஷா கூறினார்.
சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் ஆதரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
Mental Health First-Aid என்கிற மனநல முதல்உதவித் திட்டத்தில் சேர்ந்து மக்கள் பயிற்சி பெறலாம் என்கிறார் அவர்.
ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி, நாம் செய்யக்கூடிய அடிப்படையான ஒன்று, திறந்த மனதோடு பிறர் சொல்வதைக் கேட்பது. அவர்கள் மீது அக்கறை காட்டுவது என்றார் குமாரி பிரியாநிஷா.
மனநல ஆலோசகர்கள் இறுதியாகக் கூறுவது.....
பெண்களே! உதவி தேவைப்பட்டால் கேட்பதில் தவறில்லை, வெட்கமும் தேவையில்லை. தயங்காதீர்கள்.