Skip to main content
உட்லண்ட்ஸில் குப்புற விழுந்த கார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

உட்லண்ட்ஸில் குப்புற விழுந்த கார் - என்ன நடந்தது?

வாசிப்புநேரம் -
உட்லண்ட்ஸில் குப்புற விழுந்த கார் - என்ன நடந்தது?

படம்: Instagram/@sgfollowsall

உட்லண்ட்ஸில் விநோதம்...

கார்கள் நிறுத்தும் இடத்தின் வெளியேறும் பகுதியில்...

குப்புற விழுந்து கிடந்தது கார்!

என்ன நடந்தது?

நேற்று (ஜூன் 2) மாலை சுமார் 6.50 மணிக்குச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை 'செய்தி'யிடம் சொன்னது.

உட்லண்ட்ஸ் டிரைவ் 52 புளோக் 620இன் கார் நிறுத்தும் இடத்தில் நடந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காரில் 41 வயதுப் பெண் ஓட்டுநரும் பயணியும் இருந்தனர். அவர்களுக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன. சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாகப் படை கூறியது.

கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்திருக்கலாம் என்று நம்புவதாகக் காவல்துறை 'செய்தி'யிடம் பகிர்ந்தது.

சம்பவத்தின் காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.

பலருக்குக் குழப்பம்.

சிறிய இடத்தில் எவ்வாறு கார் தலைகீழாகக் கவிழ்ந்தது என்று வினவுகின்றனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்