உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மின்சாரத் தடை - சோதனைகளில் தாமதம்
Telegram
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இன்று (9 அக்டோபர்) அதிகாலை மின்சாரத் தடை ஏற்பட்டது.
சில மணி நேரம் நீடித்த தடையால் சோதனைச் சாவடியில் நீண்ட வரிசைகள் இருந்ததாகவும் குடிநுழைவுச் சோதனைகளை முடிக்கத் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
பயணிகள் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குப் பதிலாகத் துவாஸ் சோதனைச் சாவடியைப் பயன்படுத்தும்படி குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் Facebook-இல் கேட்டுக்கொண்டது.
இருள் சூழ்ந்த சோதனைச் சாவடியைக் காட்டும் படங்கள் இணையத்தில் வலம் வந்தன.
சோதனைச் சாவடிக்கு வெளியே ஏற்பட்ட வாகன நெரிசல் குறித்து இணையவாசிகள் சிலர் படங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அதிகாலை 5.30 மணியளவில் மின்சார விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதாக ஆணையம் சொன்னது.