Skip to main content
உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தில் இரண்டு புதிய மருந்தகங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தில் இரண்டு புதிய மருந்தகங்கள்

வாசிப்புநேரம் -
உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தில் இரண்டு புதிய மருந்தகங்கள்

படம்: Woodlands Health

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தில் இரண்டு புதிய மருந்தகங்கள் 357,000 பெண்களுக்கும் சிறாருக்கும் சிறப்பு மருத்துவச் சேவைகளை வழங்கவுள்ளன.

மார்பகப் பரிசோதனைகள், பிள்ளைகளுக்கான பேச்சுத் திறன் சிகிச்சை போன்றவை அங்கு வழங்கப்படும் சேவைகளில் சில.

அத்தகைய சேவைகளை வழங்கும் முதல் பொதுச் சுகாதார நிலையமாக உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம் விளங்கும்.

தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம்
KK மகளிர், சிறார் மருத்துவமனையோடு இணைந்து அந்த மருந்தகங்களை நடத்தும்.

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் பெண்களுக்கும் சிறாருக்கும் சுகாதாரச் சேவைகள் இன்னும் மேம்படுத்தலாம் என்று உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம் கூறியது.

இன்னும் சிறந்த சேவைக்காக கூடுதல் கூட்டுத் திட்டங்களுடன், ஊழியர்களுக்கு மேலும் பயிற்சிகளும் வழங்கப்படும் என்று அது சொன்னது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்