Skip to main content
மலேசிய
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மலேசிய-சிங்கப்பூர் பாலம் 100 ஆண்டுகள் - கடந்துவந்த தடைகள்

வாசிப்புநேரம் -
ஒவ்வொரு நாளும் மலேசிய-சிங்கப்பூர் இணைப்புப் பாலத்தை சுமார் 242,000 பேர் கடந்து செல்வதாக சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையம் குறிப்பிட்டது.

இரு நாடுகளையும் இணைக்கும் அந்தப் பாலத்தைக் கட்டி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன.

பாலம் சில முக்கிய நிகழ்வுகளைக் கடந்து வந்துள்ளது.

அவற்றைப் பட்டியலிட்டது 'செய்தி'..

1) இரண்டாம் உலகப் போர்

ஜப்பானியர்கள் மலேசியா (அப்போது மலாயா என்று அழைக்கப்பட்டது) மீது படையெடுத்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த சிங்கப்பூருக்குள் ஜப்பானியர்கள் நுழைவதைத் தடுக்க பிரிட்டிஷ் படைகள் பாலத்தை 2 முறை வெடி வைத்துத் தகர்த்தன.

ஜனவரி 31ஆம் தேதி 1942ஆம் ஆண்டு அன்று அது நடந்தது.

அதனால் பாலத்தில் 21.33 மீட்டர் இடைவெளி ஏற்பட்டது.

சிங்கப்பூருக்குத் தண்ணீர் விநியோகம் செய்யும் குழாய்களும் பாதிக்கப்பட்டன.

பாலத்தில் இடைவெளி ஏற்பட்ட பகுதியில் ஜப்பானியர்கள் வேறொரு பாலத்தைக் கட்டினர்.

ஜப்பானியர்கள் மலேசிய-சிங்கப்பூர் இணைப்புப் பாலம் வழி சிங்கப்பூருக்குள் நுழைந்தனர்.
படம்: Lim Kheng Chye Collection, courtesy of National Archives of Singapore
2) பாலத்தை மூட விடுக்கப்பட்ட எச்சரிக்கை

1962ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலாயாவுடன் இணைய சம்மதிக்கவில்லை என்றால் பாலத்தை மூடப்போவதாக மலேயாவின் அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் எச்சரித்தார்.

மலாயாவை தீவிரவாதத்திலிருந்தும் தாகுதல்களிலிருந்தும் பாதுகாக்க அவ்வாறு செய்யப்போவதாய் அவர் சொன்னார்.

1963ஆம் ஆண்டு செப்டம்பரில் மலாயா, சராவாக், சபா ஆகியவற்றுடன் சிங்கப்பூர் இணைந்து மலேசியக் கூட்டமைப்பை அமைத்தது.
படம்: RAFSA Collection, courtesy of National Archives of Singapore
1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாறியது.

இரு நாடுகளின் எல்லைகளை இணைக்கும் பாலமாகச் மலேசிய-சிங்கப்பூர் இணைப்புப் பாலம் மாறியது.

பாலத்தின் இரு முனைகளில் இருந்த எல்லைகளில் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

1967ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடப்பிதழைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் நுழையும் நடைமுறை தொடங்கப்பட்டது.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியா அந்த நடைமுறையைச் செயல்படுத்தியது.
படம்: Ministry of Information and the Arts Collection, courtesy of National Archives of Singapore
3) பாலத்தை இடிக்கத் திட்டம்

1996ஆம் ஆண்டிலிருந்து இணைப்புப் பாலத்தை இடிக்க மலேசிய அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது மலேசியப் பிரதமராகப் பொறுப்பு வகித்த டாக்டர் மகாதீர் முகமது அந்தத் திட்டத்தை முன்வைத்தார்.

பிறகு மலேசிய அரசாங்கம் அந்தப் பாலத்திற்குப் பதிலாக கப்பல்கள் கடந்துசெல்லக்கூடிய பாலத்தைக் கட்டும் யோசனையை முன்வைத்தது.

புதிய பாலத்தைக் கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்த இணக்கமும் எட்டப்படவில்லை.

மேலும் இருநாடுகளின் சம்மதம் இல்லாமல் சட்டப்படி அந்தப் பாலத்தை இடிக்க முடியாது என்று சிங்கப்பூர் மலேசியாவிடம் தெரிவித்தது.

அதனால் புதிய பாலத்தைக் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது.
கோப்புப் படம்: AP/Sadiq Asyraf
4) கோவிட்-19

பல்லாயிரம் மக்கள் கடந்து செல்லும் அந்தப் பாலம் கோவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் ஏற்பட்டபோது வெறிச்சோடிப் போனது.

மார்ச் 18, 2020ஆம் ஆண்டு..

மலேசியா நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நடைமுறைபடுத்தியது.

2020ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி மலேசியர்கள் பலர் தம்முடைய வேலையைக் காப்பாற்றிக்கொள்ள குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து சிங்கப்பூரில் தங்க வந்தனர்.

சிங்கப்பூர் சென்றடைய பலர் நடந்தே பாலத்தைக் கடந்து உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை வந்தடைந்தனர்.
படம்:Lena Loke/TODAY
படம்: TODAY
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு இருநாடுகளும் எல்லைகளைத் திறந்துவிட்டன. பலர் தங்களுடைய தாயகத்திற்குத் திரும்ப உற்சாகத்துடன் புறப்பட்டனர்.
படம்: Aaron Low/TODAY
படம்: Ooi Boon Keong/TODAY
படம்: Aaron Low/TODAY
படம்: Aaron Low/TODAY
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்