சிங்கப்பூர்-ஜொகூர் பாலம் - உருவான கதை தெரியுமா?

(படம்: Reuters/Johor local history, local landscape/ P. Lim Pui Huen)
உட்லண்ட்ஸை மலேசியாவின் ஜொகூர் பாருவுடன் இணைக்கும் பாலம்..
உலகிலேயே ஆகப் பரபரப்பான நிலப் பாலங்களில் ஒன்று.
28 ஜூன் 1924 .....
பாலம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட நாள்.

இன்னும் சில நாள்களில் 100 ஆண்டு நிறைவைக் காண்கிறது.
பாலம் கட்டப்படுவதற்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே எப்படி மக்கள் பயணம் செய்தனர்?
பாலத்தைக் கட்டுவதற்கான யோசனை எப்படி வந்தது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சேகரித்தது 'செய்தி'.
பாலத்துக்கு முன்....

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பொருள்கள் கப்பல் வழி இடம் மாற்றப்பட்டன.
பொதுமக்களும் கப்பல் வழி பயணம் செய்தனர்.
ஆனால் நாளடைவில் பரிமாற்றம் செய்யப்படும் பொருள்களின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.
அவற்றைக் கப்பல்களால் சமாளிக்க முடியவில்லை.
அப்போதுதான் 1912ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
பிறகு 1919ஆம் ஆண்டு பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

பாலம் சில சுவைத் தகவல்கள்
-- 17 மில்லியன் வெள்ளி செலவில் பாலம் கட்டப்பட்டது
-- நீளம் - 1,056 மீட்டர்
-- 2000க்கும் அதிகமான ஊழியர்கள் கட்டுமானப் பணிக்குத் தேவைப்பட்டனர்
-- பாலத்தைக் கட்ட சுமார் 1.5 மில்லியன் Cubic Yard கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
-- புலாவ் உபின், புக்கிட் தீமா பகுதிகளிலிருந்து கருங்கற்கள் கொண்டுவரப்பட்டன
-- பாலத்தைக் கட்ட 4 ஆண்டுகள் பிடித்தது

1924ஆம் ஆண்டு பாலம் திறக்கப்பட்டவுடன் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே ரயில் வழியாகவும் சாலை வழியாகவும் போக்குவரத்து கணிசமாக அதிகரித்தது.
1932ஆம் ஆண்டு ஜொகூரிலிருந்து சிங்கப்பூருக்குத் தண்ணீர் விநியோகிக்க தண்ணீர்க் குழாய்கள் பாலத்திற்கு அருகே கட்டப்பட்டன.