Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கமாக்கப்படும்

வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வாசிப்புநேரம் -
வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கமாக்கப்படும்

(படம்: Pixabay)

வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 16ஆம் தேதியிலிருந்து ஜூன் 13ஆம் தேதிவரை அது நடப்பில் இருக்கும்.

சமூக அளவில் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று.

வெவ்வேறு இடங்களில் வேலை செய்வோரை மாற்றிப் பணியமர்த்துவதற்கு எதிரான தடை தொடரும்.

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் அவ்வாறு தொடர்வதை, முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.

வேலையிடங்களுக்குத் செல்லும் ஊழியர்களுக்கு, வெவ்வேறு நேரத்தில் வேலை ஆரம்பிக்கும் நடைமுறை நடப்பில் இருக்க வேண்டும்.

ஊழியர்களுக்கு, நீக்குப்போக்கான பணி நேரம் நடப்பில் இருக்க வேண்டும்.

வேலையிடத்தில் சமூக ஒன்றுகூடல்களுக்கு அனுமதி இல்லை.

இடைவேளையின்போது, வேலையிடத்தில் ஊழியர்கள் உணவு அருந்தலாம்.

ஆனால், முகக்கவசம் அகற்றப்படும்போது, சக ஊழியர்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள், வேலையிடங்களிலும், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும், கிருமிப்பரவல் அபாயத்தைக் குறைக்கும் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்