Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஆயுதப் படையின் புதிய பிரிவில் சிலருக்கு வேலை செய்துகொண்டே பயிலும் வாய்ப்பு

வாசிப்புநேரம் -

தேசிய சேவையாளர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்,சிங்கப்பூர் ஆயுதப் படையின் புதிய மின்னிலக்க, வேவுச் சேவைப் பிரிவில் வேலை செய்துகொண்டே பயிலும் வாய்ப்பைப் பெறவிருக்கின்றனர்.

அந்தத் திட்டத்தில் சேருவோர், 4 ஆண்டு காலத்துக்குச் சேவையாற்றுவர்.

சிங்கப்பூர் ஆயுதப் படை அதன் நான்காவது சேவைப் பிரிவாக, மின்னிலக்க, வேவுச் சேவைப் பிரிவை இவ்வாண்டின் நாலாம் காலாண்டுக்குள் தொடங்கவிருப்பதாக அண்மையில் அறிவித்தது.

அதில் சேரும் மின்னிலக்க நிபுணர்கள் உண்மையான ராணுவச் செயல்பாட்டுக்கு ஆதரவாகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதோடு, மென்பொருள் பொறியியல் பணிகளையும் மேற்கொள்வர்.

தற்காப்பு  அமைச்சும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமும் அது பற்றி தகவலை  அளித்தன.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்