Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்க்கும் பிரச்சினைகளில் 27 பேர் கைது

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்க்கும் பிரச்சினைகளில் 27 பேர் கைது

(படம்: Singapore Ministry of Manpower)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்க்கும் பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவு முழுதும் இம்மாதம் 16ஆம், 17ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

சட்டவிரோதமாக வேலைக்கு ஆள் சேர்த்தது, வேலை அனுமதி விண்ணப்பத்தில் தவறான விவரங்களை அளித்தது, வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேலையில் இல்லாத சிங்கப்பூரர்களுக்கு மத்திய சேம நிதித் தொகை செலுத்தியது ஆகிய குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகள் 19 இடங்களில் திடீர்ச் சோதனை நடத்தினர்.

உணவகங்கள், குடியிருப்பு இடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன.

பிடிபட்டவர்கள் சுமார் 290 வெளிநாட்டு ஊழியர்களைச் சட்டவிரோதமாக அழைத்துவந்திருப்பதாய்ச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த இடங்களில் மடிக்கணினி, கைத்தொலைபேசி உட்பட 80 சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முறையான வேலை அனுமதியின்றி வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்க்கும் முதலாளிகளுக்கு குறைந்தது 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.

அவர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

அபராதம், சிறைத்தண்டனை இரண்டும் விதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.

அவர்கள் அதன்பிறகு வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கமுடியாது.

முறையான வேலை அனுமதியின்றி சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு 20,000 வெள்ளி வரை அபராதம், ஈராண்டு வரைச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அவர்கள் அதற்குப் பிறகு சிங்கப்பூருக்குப் பணிபுரிய வரமுடியாது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்