Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலையிடத்தில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால், ஊழியர் மரணம் - கனரக வாகன ஓட்டுநருக்குச் சிறைத்தண்டனை

வாசிப்புநேரம் -

வேலையிடத்தில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற தவறியதால், சக ஊழியர் உயிரிழக்க நேரிட்ட சம்பவத்தின் தொடர்பில் கனரக வாகன ஓட்டுநருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முகமது ஸுல்கர்னைன் போய்மன் எனும் அந்த 34 வயது ஓட்டுநருக்கு 20 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு சொன்னது.

சம்பவம் 2018-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி நடந்தது.

ISO tank எனும் கொள்கலனைக் கனரக வாகனத்தில் ஏற்றுவதற்காக ஸுல்கர்னைன் சென்றார்.

இருப்பினும், அதனை இன்னொரு கொள்கலன் மறைத்துக்கொண்டிருந்தது.

அதனைப் பாதையிலிருந்து நகர்த்த ஆடவர் எண்ணினார்.

அவர் வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்தியபோது, இரண்டு கொள்கலன்களுக்கும் நடுவில் இருந்த சிவசாமி நேத்தாஜி எனும் ஊழியர் சிக்கிக்கொண்டார்.

அந்த ஆடவர் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் மாண்டார்.

கவனக்குறைவான செயலால் மரணம் விளைவித்ததை ஸுல்கர்னைன் ஒப்புக்கொண்டார்.

கொள்கலனைப் பாதையிலிருந்து நகர்த்த முற்பட்டபோது ஆடவர் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதாகவும், மற்ற ஊழியர்கள் அருகில் உள்ளார்களா என்பதைப் பார்க்கத் தவறியதாகவும் அமைச்சு சொன்னது. 

சம்பந்தப்பட்ட நிறுவனமான Bee Joo Industries மீதும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்பிலான விசாரணை தொடர்கிறது.
 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa